Add Pinch of Pepper for Weight Loss Tamil News : இந்திய உணவுகள், சுவைகளை தருபவைகளாக மட்டும் இல்லாமல், ஆரோக்கியத்தை தூண்டுவதாகவும் விளங்கி வருகிறது. இந்திய உணவு வகைகளில் சேர்க்கப்படும் பல விதமான மசாலா பொருள்கள், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துகளை வழங்கி வருகின்றன. அவ்வாறு, நாம் அன்றாடம் அதிக அளவில் பயன்படுத்தி வரும் கருப்பு மிளகு, உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது.
கருப்பு மிளகில், வைட்டமின் ஏ, சி மற்றும் கே, தாது உப்புகள், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் ஆகியவை காணப்படுவதால் வளர்ச்சிதை மாற்றத்தை நன்றாக தூண்டுகிறது. மிளகில் பைப்பரை எனும் வேதிப்பொருள் செறிந்து காணப்படுகிறது. இது, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது. உடலில், புதிய கொழுப்பு செல்கள் உருவாவதை தடுப்பதோடு, கொழுப்பு உடலில் குவிவதையும் கட்டுப்படுத்துகிறது. மேலும், மிளகு, கொழுப்பு அமிலங்கள், ட்ரைகிளிசரைடுகள், பாஸ்போலிப்பிட்கள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க மிளகு உதவுகிறது.
மிளகை பயன்படுத்தி எப்படி உடல் எடையை குறைக்கலாம்?
மிளகை நேரடியாக சாப்பிடுதல் :
கருப்பு மிளகை சாப்பிடும் போதும், எரியும் தன்மை கொண்டது. வளர்ச்சிதை மாற்றத்தை அன்றாடம் புதுப்பித்து, உடல் செயலியலில் நல்ல மாற்றத்தை பெற தினமும் 2 மிளகினை கடித்து சாப்பிட்டு வரலாம்.
மிளகு தேநீர் :
கருப்பு மிளகை பொடி செய்து, தேநீரில் கலந்து குடித்து வரலாம்.
பழங்கள், சாலட்டுகளில் பயன்படுத்துதல் :
கருப்பு மிளகு சுவையூட்டியாக பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு பிடித்த சாலட் மீது மிளகுப் பொடியை தெளிக்கவும். இது உங்கள் உணவுக்கு கூடுதல் சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்க உதவுகிறது.
குளிர்பானங்களோடு மிளகினை சேர்க்கலாம் :
தினமும் மோர் குடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தால், மோர் தயார் செய்த பிறகு ஒரு சிட்டிகை அளவுக்கு மிளகினை அதோடு சேர்த்து குடிக்கலாம். எலுமிச்சை, புதினா போன்றவைகளை கொண்டு நீங்கள் தயாரிக்கும் கோடைக்கால பானங்களில் மிளகினை சேர்க்கலாம். இது, உங்களுக்கு சுவையாக இருப்பதோடு, உடல் எடையை குறைக்கும் எளிய வழியாகவும் விளங்கும். மேலும், மிளகினை தொடர்ந்து பயன்படுத்தி வர, குடல் இயக்கங்களை சீர்ப்டுத்துவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் தூண்டுகிறது.
மிளகு எண்ணெய் :
ஒரு டம்ளர் நீரில், தூய மிளகு எண்ணெய்யை தேவையான அளவு கலந்து, காலை உணவுக்கு முன் குடித்து வர வேண்டும். மேலும், காய்கனி சாலட்டுகளின்
மீது தெளித்தும் சாப்பிடலாம்.”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.