அகத்திக் கீரை காரணப் பெயர் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். அகத்திக் கீரை என்பது – அகத்தை சுத்தப்படுத்துவதால் அகத்தி கீரை என்று கூறுகின்றனர். ஆம், வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் அகத்திக் கீரைக்கு உள்ளது.
புறத் தூய்மை நீரால் அமையும், அகத் தூய்மை வாய்மையால் அமையும் என்று சொல்கிறது. பைந்தமிழ் இலக்கியம். ஆனாலும், சித்த மருத்துவத்தில், உடலின் அகத்தை சுத்தப்படுத்துவது அகத்திக் கீரைதான் என்கிறார்கள். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் அகத்திக் கீரைக்கு உள்ளது. அகத்திக் கீரையுடன் சுத்தமான பசு நெய்யும் சின்ன வெங்காயமும் சேர்த்து கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர உடலுக்கு நல்ல பலன்கள் தரும்.
அகத்தி என்றால் முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். இது நமது அகத்தின் தீயை அகற்றுவதால் அதை அகத்தி என அழைக்கின்றனர். அகத்திக் கீரையில், நீர்-73 சதவீதம் புரதம்-8.4சதவீதம் கொழுப்பு-1.4 சதவீதம் தாதுப்புக்கள்-2.1சதவீதம் நார்ச்சத்து-2.2சதவீதம் மாவுச்சத்து-11.8சதவீதம் இந்த கீரையில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
அகத்திக் கீரையில் அடங்கியுள்ள புரதச்சத்து மிகச் சிறந்த புரதமாக கருதப்படுகிறது. சுண்ணாம்புச்சத்து, இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. அகத்திக் கீரையில், உயிர்ச்சத்துக்கள் நிறைய உள்ளது. வைட்டமின் ஏ 100கி, 9000 கலோரிகள் உள்ளது.
அகத்திக் கீரையின் சிறப்புகள்:
மருந்து சாப்பிடும் காலத்தில் அகத்திக் கீரையைத் தவிர்த்தல் நல்லது. அகத்திக் கீரை வாதத்தை சரிசெய்யும். இது அதிகப்படியான மலமிலக்கியாகும். வயிற்றில் உள்ள கெட்ட புழுக்களை கொல்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது. மருத்துவப் பயன்கள்: அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன.
அகத்திக் கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை தனித்து சமநிலைப்படுத்தும். குடல்புண், அரிப்பு, சொறி சிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும். தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலிக்கு அகத்திக் கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். ரத்தப் பித்தம், ரத்த கொதிப்பு ஆகியவை அகத்திக்கீரையை உண்பதால் அகலும்.
அகத்திக் கீரையின் வேறு பயன்பாடுகள்
அகத்திக் கீரை கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகின்றது. அகத்திக் கீரையில் இருந்து தைலம் தயார் செய்யப்படுகிறது. அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப் பொருள்களாக பயன்படுகிறது. அகத்திப்பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேர் மூட்டு வலிக்கு மருந்தாக அரைத்து பயன்படுத்தப்படுகிறது.
அகத்திக் கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இருதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கிறது. அகத்தி கீரையில்-16.22 சதவீதம் வைட்டமின் சி உள்ளது. இது ரத்த குழாய்கள் தடிமன் ஆவதை தடுத்து நிறுத்துகிறது. கொழுப்புகளை கரைக்கிறது. வைட்டமின் சி சத்து குறைவாக உள்ளவர்களை பக்கவாதம், ரத்த குழாய் அடைப்பு, மாரடைப்பு போன்றவைகள் தாக்கும். பொலிவிழந்த தோலிற்கு கருவளையங்கள் நிறைந்த முகத்திற்கு அகத்தி ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. ரத்த சோகையை நீக்கு கிறது.
பிராணவாயு சரியாக செல்லாததால் தோல் பொலிவிழந்து காணப்படும். இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளுதல் தோலுக்கு நல்ல நிறத்தை தருகிறது.
அகத்தி கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணிநேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும். இளநரை ஏற்படுவதையும் தடுக்கும். அகத்திக் கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும்.
அகத்திக் கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும். பூவைச் சமைத்து உண்டு வர மலச்சிக்கல் குறையும். அகத்தி இலைச்சாற்றை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த ஒரு மாதத்தில் இருமல் குறையும். அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாற்றோடு – அதே அளவு தேன் கலந்து உண்டு வர வயிற்று வலி நீங்கும்.
அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்பட்டை, தேமல், சொரி, சிரங்கு உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும்.
அகத்திக் கீரையுடன் சுத்தமான பசு நெய்யும் சின்ன வெங்காயமும் சேர்த்து கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர நல்ல பலன்கள் தரும் என்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“