/tamil-ie/media/media_files/uploads/2019/03/D1PUilEVAAAPzNd.jpg)
Akash Ambani weds Shloka Mehta
Akash Ambani weds Shloka Mehta : ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானி தம்பதிகளின் மகனான ஆகாஷ் அம்பானிக்கு சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது. வைர வியாபாரி ரஸ்ஸெல் மேத்தா - மோனா மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தாவினை ஆகாஷிற்கு திருமணம் செய்து வைக்க உள்ளனர். மும்பை பாந்திரா குர்லா வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த திருமணம்.
Akash Ambani weds Shloka Mehta - நட்சத்திர பட்டாளங்களின் அணி வகுப்பு
இந்த திருமண நிகழ்வில், இஷா அம்பானி - ஆனந்த் பிரமல் இணைக்கு நடந்த திருமண நிகழ்வினைப் போல பல்வேறு துறையில் இருந்து தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும், நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டனர்.
இந்த திருமனத்தில் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளையர் மற்றும் அவரது மனைவி, கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதே போல் பாலிவுட் நட்சத்திரங்கள் அமீர் கான், ஷாருக் கான், சச்சின் டெண்டுல்கர், ரன்பீர் கபூர், ஆலியா பட், வித்யா பாலன், கரன் ஜோஹர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், கரீனா கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மூன்று நாள் நிகழ்வில் நேற்று மட்டும் இத்தனை பேர் பங்கேற்றனர். இன்று திருமணமும் நாளை மிகப்பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ரஜினிகாந்த் தன்னுடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மருமகன் விசாகன் ஆகியோரோடு இந்த திருமண விழாவில் பங்கேற்றார்.
மேலும் படிக்க : முகேஷ் அம்பானி – ஸ்டாலின் சந்திப்பு! மகன் திருமணத்திற்கு நேரில் அழைப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.