how to make almond milk at home Tamil news: உங்கள் வீட்டிலே தயார் செய்யும் ஆரோக்கியமான பாதாம் பால் எப்படி செய்யலாம் என்பதற்கான சிறிய செய்முறை தொகுப்பை இங்கு வழங்கியுள்ளோம்
how to make almond milk at home Tamil news: உங்கள் வீட்டிலே தயார் செய்யும் ஆரோக்கியமான பாதாம் பால் எப்படி செய்யலாம் என்பதற்கான சிறிய செய்முறை தொகுப்பை இங்கு வழங்கியுள்ளோம்
almond milk recipe news tamil news how to make almond milk at home
Almond milk recipe tamil news: உலகில் சைவ உணவு கலாச்சாரம் பிரபலமடைந்த ஒன்றாக வளர்ந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் 'சைவ பால்' என்ற பானம் அதிக நபர்களால் நுகரப்படாத ஒன்றாக உள்ளது. ஏனென்றால் சைவ பாலின் விலை பாலின் விலையை விட அதிகமாக உள்ளது. அதோடு லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்ற மற்றும் பால் பொருட்களை உட்கொள்ள முடியாதவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
Advertisment
சைவப் பாலுக்கு பதிலாக உங்கள் வீட்டிலே தயார் செய்யும் ஆரோக்கியமான பாதாம் பால் எப்படி செய்யலாம் என்பதற்கான சிறிய செய்முறை தொகுப்பை இங்கு வழங்குகிறோம்.
பாதாம் பால் செய்முறை
முதலில் பாதாம் பால் செய்வதற்கான மூல பாதாமை இரவு உறங்குவதற்கு முன்னர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் மறுநாள் அதை நன்றாக தூளாக்க வேண்டும். இப்போது அந்த தூளை நான்கு கப் புதிய குளிர்ந்த நீரில் சேர்க்க வேண்டும். அவை நன்கு மென்மையானதாக மாறும் வரை நான்கு-ஐந்து நிமிடங்கள் நன்றாக கலக்க வேண்டும்.
Advertisment
Advertisements
அதன்பின் ஒரு பருத்தி துணி அல்லது வடிகட்டியைப் பயன்படுத்தி கலவையை நன்றாக வடிகட்டவும். பின்னர் அந்த பாதாம் பாலை காற்று புகாத டப்பாவில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்க வேண்டும்.
மீதமுள்ள பாதாம் கூழ்மத்தை என்ன செய்வது?
சைவ உணவு கலாச்சாரம் உணவு வீணாவதைக் குறைப்பதை ஊக்குவிக்கிறது. எனவே பாதாம் பருப்பிலிருந்து பால் பிரித்தெடுத்த பிறகு, நீங்கள் அதை பல வழிகளில் பயன்படுத்தலாம். நீங்கள் அதை சுடலாம் அல்லது ஒரு கடாயில் வறுக்கலாம். இந்த வறுத்த பாதாம் எச்சத்தை தயிர், சியா விதை புட்டு, கிரானோலா ஆகியவற்றில் பயன்படுத்தலாம். மற்றும் ரோட்டிஸ் அல்லது ரொட்டி தயாரிக்க பயன்படுத்தக்கூடிய மாவுடன் கலக்கலாம்.
பாதாம் பால் எவ்வளவு காலம் நீடிக்கும்?
பிரித்தெடுக்கப்பட்ட பாதாம் பால் மற்ற பால் போலவே, மூன்று நாட்களுக்கு மிகாமல் இருக்கும். எனவே அதன் சிறிய தொகுதிகளை உருவாக்கி குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வைக்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil