சைடிஷ் தேவையில்லை: வீட்டில் பூரி இப்படி செய்து பாருங்க!
ALOO POORI seivathu eppadi tamil: நாம் எப்போதும் தயார் செய்யும் பூரி போலவே இருக்கும் இந்த பூரியை உங்களது வீட்டில் ஒருமுறை செய்து ருசித்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.
ALOO POORI seivathu eppadi tamil: நாம் எப்போதும் தயார் செய்யும் பூரி போலவே இருக்கும் இந்த பூரியை உங்களது வீட்டில் ஒருமுறை செய்து ருசித்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.
aloo Poori recipe in tamil: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பும் உணவுகளில் ஒன்றாக பூரி உள்ளது. இந்த பூரியுடன் வழங்கப்படும் உருளைக்கிழங்கு குருமாவின் சுவையே தனி தான். எனினும், பூரி செய்பவர்களுக்கு இவற்றை தயார் செய்ய கூடுலதாக நேரம் பிடிக்கிறது. ஆனால் இன்று நாம் பார்க்கவுள்ள மசாலா பூரிக்கு எந்த சைடிஷ்-வும் தேவையில்லை.
Advertisment
நாம் எப்போதும் தயார் செய்யும் பூரி போலவே இருக்கும் இந்த பூரியை உங்களது வீட்டில் ஒருமுறை செய்து ருசித்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும். அதோடு குழந்தைகளுக்கும் பெரியவர்களும் விரும்பி உண்பர்.
கோதுமை மாவில் புசுபுசு மசாலா பூரி செய்வது எப்படி?
Advertisment
Advertisements
சுவையான மற்றும் புசுபுசு மசாலா பூரி தயார் செய்ய முதலில் 1/2 டம்ளர் வறுக்காத ரவை மாவு எடுத்து கொள்ளவும். அவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு அதில் 1 டம்ளர் சுடு தண்ணீர் சேர்த்து சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பிறகு அவற்றை ஒரு சிறிய கரண்டியால் நன்கு மசிந்து கொள்ளவும்.
தொடர்ந்து அவற்றில் 1/2 துருவிய உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு, 2 சிட்டிகை மஞ்சள் தூள், 1/4 ஸ்பூன் தனி மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் மிளகாய் செதில்கள் (chilli flakes), மற்றும் பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இப்போது 1 டம்ளர் கோதுமை மாவை அவற்றுடன் சேர்த்து பூரிக்கு மாவு தேய்ப்பது போல உருண்டையாக பிடித்து வைத்துக்கொள்ளவும். பின்னர் அவற்றை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி பூரிக்கு ஏற்றார் போல் தேய்த்து வைத்துள்ளவும்.
தொடர்ந்து கடாயில் எண்ணெய் விட்டு பூரி மாவை ஒன்றன் பின் ஒன்றாக இட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது நாம் எப்போதும் சுடும் பூரி போல புசுபுசுவென்று பொரிந்து வரும் இந்த மசாலா பூரியை சுவைத்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil