Amala Paul : தனது கம்ஃபோர்ட் ஸோனிலிருந்து வெளிவரும் நடிகைகளில், முக்கியமானவர்களில், நடிகை அமலா பாலும் ஒருவர். ’ஆடை’ படத்திற்காக மிகவும் துணிச்சலாக ஆடையில்லாமல் நடித்தார். அடுத்ததாக, ‘அதோ அந்த பறவைப் போல’ படத்தில் ஆக்ஷன் அவதாரத்தில் நடிக்கவிருக்கிறார்.
கொரொனா தாக்கம் : வலிமை படக்குழுவின் அடுத்த பிளான்
அமலா சமீபத்தில் மும்பைக்கு விடுமுறைக்காக சென்றிருந்தார். அங்கு அவர் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ந்தார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் அமலா பால். அந்த வீடியோவில் அமலாவும் அவரது பெண் தோழியும் இந்தியில் உள்ள காதல் பாடல் ஒன்றை பாடுகிறார்கள். ரொமாண்டிக்காக அமலா செய்யும் செய்கைகளால், அங்கே சிரிப்பும் வெடிக்கிறது.
View this post on Instagram
6 மாதத்தில் ரூ.18,000 கோடி ”வித்ட்ரா”… யெஸ் வங்கி விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?
“இசை, கதைகள், சிரிப்பு, கண்ணீர் மற்றும் அன்பு அன்பு அன்பு…. அன்பு எல்லா இடங்களிலும் உள்ளது …” என்ற கேப்ஷனில் அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார் அமலா பால். இவரின் அடுத்தப்படம் பாலிவுட் நடிகை பர்வீன் பாபியின் வாழ்க்கை வரலாறு. இதனை இயக்குநர் மகேஷ் பட் இயக்குகிறார். 70-களில் பர்வீனுடன் ரிலேஷன் ஷிப்பில் இருந்ததாகக் கூறப்படும் மகேஷ் பட் தான், நடிகை ஆலியா பட்டின் தந்தை என்பது கூடுதல் தகவல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”