வருடம் முழுவதும் காய்க்கும் சுண்டைக்காய்… அலர்ஜி, குடல் புண்ணுக்கு அருமருந்து; டாக்டர் கௌதமன்
வருடம் முழுவதும் காய்த்து பலன்தரக்கூடிய குணம் கொண்ட சுண்டைக் காய், பரம்பரையாக தொடரும் நோய்களை விடாமல் விரட்டும் ஆற்றல் கொண்டது. செரிமானம் மற்றும் நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களை குணப்படுத்திடும்
வருடம் முழுவதும் காய்த்து பலன்தரக்கூடிய குணம் கொண்ட சுண்டைக் காய், பரம்பரையாக தொடரும் நோய்களை விடாமல் விரட்டும் ஆற்றல் கொண்டது. செரிமானம் மற்றும் நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களை குணப்படுத்திடும்
நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். சுண்டைக்காய் அதன் தனித் துவமான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்களுக்காக நன்கு அறியப்படும் ஒரு பிரபலமான தாவரமாகும். இது தக்காளி, மிளகு, கத்தரிக்காய் போன்ற சில பொதுவான காய்கறிகளைப் போலவே, சுண்டைக்காயும் தாவரங்களின் அதே குடும்பத்தைச் சேர்ந்ததாகும். சுண்டைக்காயின் நன்மைகள் பற்றி சிலவற்றைக் காண்போம்.
Advertisment
வருடம் முழுவதும் காய்த்து பலன்தரக்கூடிய குணம் கொண்ட சுண்டைக் காய், பரம்பரையாக தொடரும் நோய்களை விடாமல் விரட்டும் ஆற்றல் கொண்டது. செரிமானம் மற்றும் நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களை குணப்படுத்திடும். மேலும் சாப்பிடும் சத்துகளை உடலில் முழுமையாக சேர்த்து ஆரோக்கியத்தை காத்திடும். குடல் புழுக்களை அழித்து பெருங்குடல் நோய்களை குணப்படுத்திடும்.
சிறுநீரக கற்களை அறுவை சிகிச்சை இன்றி சீராக்கும் ஆற்றல் பெற்றது. மூளை, இதயம், நுரையீரல், ஈரல், சிறுநீரகம், செரிமான மண்டலம், நரம்பு மண்டலம் என 7 மண்டலங்களும் ராஜ உறுப்புகளாக உள்ளன. 7 உறுப்புகளையும் பலமாக வைத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ மிகப்பெரிய அருமருந்து சுண்டைக்காய்.
உடலின் 7 ராஜ உறுப்புகள் சார்ந்த நோய்களை எளிதில் சீராக்கி பலமான ஆரோக்கியம் கிடைத்திட உதவி செய்திடும். பெண்களின் அதீத உதிர போக்கு, நரம்பு தளர்ச்சி போன்ற அசௌகரியங்களை குணமாக்கி ஆயுள் முழுதும் ஆரோக்கியம் அடைய செய்கின்றது. பரம்பரையாக வரக்கூடிய சில ஒவ்வாமை நோய்களை எவ்வாறு தடுப்பது? என்ற ஆராய்ச்சி உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது. அந்த ஆராய்ச்சியில், ஒரு பெரிய முன்னேற்றத்தை தந்திருக்கக் கூடிய ஒருமூலக்கூறு சுண்டைக்காயிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
தமிழ் மருத்துவ நூல்களிலும், ஆயுர்வேத மருத்துவ நூல்களிலும் ஒவ்வாமைக்கான சிறந்த மருந்தாக சுண்டைக்காய் கூறுகிறது. அப்படி, சுண்டைக்காய் சாப்பிடுபவர்களிடம் பெருங்குடல் நோய், மலச்சிக்கல் பிரச்னை இருக்காது. சுண்டைக்காயை பருப்பு சேர்த்த உணவுடன் குழந்தைகளுக்கு வாரம் இருமுறை தொடர்ந்து கொடுப்பதால், குடல் புழுக்களை அழித்து பெருங்குடல் நோய்களை குணப்படுத்திடும். சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுப்பதற்கும், மீண்டும் சிறுநீரக தொற்றுகள் ஏற்படாமல் இருப்பதற்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் சுண்டைக் காயை விட சிறந்த உணவு கிடையாது என்கிறார் மருத்துவர் கௌதமன்.