உடல் எடை குறையும் போது, இப்படி தான் கொழுப்பு வெளியேறும்; வல்லுநர்கள் விளக்கம்

நம்முடைய உடல் எடையை குறைக்கும் போது அதன் கொழுப்பு என்னவாகும் என்று வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதனை இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.

நம்முடைய உடல் எடையை குறைக்கும் போது அதன் கொழுப்பு என்னவாகும் என்று வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதனை இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Wright loss explained

சமூக வலைதளங்களில் பலரும் சொல்வது போல கொழுப்பு உருகிப் போகிறதா? அல்லது வயிற்றிலிருந்து தொடைக்கு மாறுகிறதா? இல்லை, காற்றில் கரைந்து விடுகிறதா? உடல் எடை குறையும்போது உண்மையில் என்ன நடக்கிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? அதற்குப் பின்னால் சுவாரஸ்யமான அறிவியல் ஒளிந்திருக்கிறது. நிபுணர்களின் உதவியுடன் அதை விளக்குகிறோம்.

Advertisment

உங்கள் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பை பயன்படுத்தக்கூடிய சக்தியாக மாற்ற "வளர்சிதை மாற்ற செயல்முறைகள்" நடைபெறுகின்றன. இந்த மாற்றத்தின் விளைவாக இரண்டு முக்கிய கழிவுப் பொருட்கள் உருவாகின்றன: அவை கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர். ஆச்சரியப்படும் விதமாக, அதிக சதவீத கொழுப்பு கார்பன் டை ஆக்சைடாக வெளியேறுகிறது, மீதமுள்ளவை நீராக வெளியேற்றப்படுகின்றன என்று ஜான்ட்ரா ஹெல்த்கேரின் நீரிழிவு நோய் நிபுணரும், ரங் தே நீலா இணை நிறுவனருமான மருத்துவர் ராஜீவ் கோவில் கூறுகிறார்.

டெல்லியில் உள்ள சி.கே. பிர்லா மருத்துவமனையின் முதன்மை ஆலோசகர் மருத்துவர் நரேந்தர் சிங்லா கூறுகையில், "நீங்கள் இழக்கும் கொழுப்பில் கணிசமான பகுதி, சுமார் 84 சதவீதம், கார்பன் டை ஆக்சைடு வடிவில் உங்கள் உடலில் இருந்து வெளியேறுகிறது. இது நுரையீரலில் நிகழ்கிறது. அங்கு கார்பன் டை ஆக்சைடு இரத்த ஓட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டு சுவாசிக்கும் போது வெளியேற்றப்படுகிறது. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு சுவாசமும் வளர்சிதை மாற்றம் அடைந்த கொழுப்பை அகற்ற உதவுகிறது," என்று தெரிவித்தார்.

எளிமையாகச் சொன்னால், நீங்கள் இழக்கும் பெரும்பாலான கொழுப்பை சுவாசித்து வெளியேற்றுகிறீர்கள் என்று மருத்துவர் ராஜீவ் கூறினார். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆழ்ந்த சுவாசம் ஆகியவை கொழுப்பு இழப்பில் முக்கிய பங்கு வகிப்பதையும் இது விளக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Advertisment
Advertisements

மீதமுள்ள 16 சதவீத கொழுப்பு நீராக மாற்றப்படுகிறது. "இந்த நீர் பல்வேறு இயற்கையான செயல்முறைகள் மூலம் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. உடல் வெப்பநிலையை சீராக்க உங்கள் தோல் அதிகப்படியான நீரை வெளியிடுவதால் அது வியர்வை மூலம் வெளியேறுகிறது. அது சிறுநீரகங்களால் வடிகட்டப்பட்டு சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது. கூடுதலாக, கண்ணீர் மற்றும் உமிழ்நீர் போன்ற மற்ற உடல் திரவங்கள் மூலமாகவும் சிறிய அளவில் நீர் இழக்கப்படுகிறது" என்று மருத்துவர் சிங்லா விளக்கினார்.

குறிப்பாக, மலம் அல்லது சிறுநீர் மூலம் நேரடியாக கொழுப்பு வெளியேற்றப்படுவதில்லை. "அதற்கு பதிலாக, அது வளர்சிதை மாற்றம் அடைந்த பிறகு, கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர் போன்ற துணைப் பொருட்கள் மூலம் அகற்றப்படுகின்றன. எனவே, அடுத்த முறை நீங்கள் எடை குறையும்போது, உங்கள் உடல் கொழுப்பை உடைத்து அதன் துணைப் பொருட்களை அகற்ற தீவிரமாக செயல்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று மருத்துவர் சிங்லா கூறினார்.

எடை குறைப்புக்கு உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான உணவை இணைப்பது அவசியம். "நிபுணரிடம் பேசி இதைப் புரிந்துகொள்வது நல்லது. உங்கள் முன்னுரிமை எடை குறைப்பு மட்டுமல்ல, கொழுப்பு இழப்பாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று மருத்துவர் ராஜீவ் அறிவுறுத்தினார்.

Weight Loss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: