Anti aging drinks : சருமம் ஆரோக்கியமாக இருக்க, வாழைப்பழம், அன்னாசி, ஆளி விதை, தேங்காய் பால், தேங்காய் எண்ணெய், இஞ்சி, பட்டை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து குடித்து வர வேண்டும். மேலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வந்தாலே சருமத்தை பாதுகாக்க முடியும். நாம் சாப்பிடக்கூடிய உணவுகளாலும், சுற்றுப்புற சூழல் காரணமாகவும், வயது முதிர்ச்சி காரணமாகவும் சருமம் பாதிப்படையும்.
அத்தோடு ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் குறைபாடு மற்றும் நாம் பயன்படுத்தக்கூடிய அழகு சாதன பொருட்கள் காரணமாகவும் சருமம் பாதிப்படையும்.
சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்:
ஆண்டிஆக்ஸிடண்ட், ஒமேகா-3, -6 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, சி நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும். அதேபோல, ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களையும் சாப்பிடலாம்.
ஃபேட்டி அமிலம் கொட்டைகள் மற்றும் விதைகளில் அதிகம் உள்ளது எனவே இவற்றை சாப்பிடுவதால் சருமம் பொலிவாகும். வைட்டமின் சி-யில் கொலாஜனை உற்பத்தி செய்யும் தன்மை இருக்கிறது. வைட்டமின் ஈ சருமத்தை சூரிய மற்றும் புற ஊதா கதிர்களால் உண்டாகும் சரும பாதிப்பை சரிசெய்து விடும்.
இந்நிலையில், சருமம் பளிச்சென்று இருக்க ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த பானத்தை அருந்துங்கள்.
இதை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?
அன்னாசி, ஆளி விதை, வாழைப்பழம், தேங்காய் பால், தேங்காய் எண்ணெய், இஞ்சி, பட்டை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து குடித்து வந்தால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
மேலும் தேங்காய் பால் மற்றும் எண்ணெயில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள் இருக்கிறது. ஆளிவிதையில் ஒமேகா ஃபேட்டி அமிலம் இருப்பதால் சருமம் பளபளப்பாக இருக்கும். இஞ்சி மற்றும் மஞ்சளில் ஆண்டி-ஏஜிங் தன்மை இருப்பதால் சருமத்தை பாதுகாப்பாக பராமரிக்க உதவும்.
அன்னாசி மற்றும் வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு பௌலில் அதனை சேர்த்து அத்துடன் ஆளிவிதை, துருவிய இஞ்சி, தேங்காய் எண்ணெய், பட்டை தூள், மஞ்சள் தூள் மற்றும் ஆளிவிதை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். அதில் தேங்காய் பால் சேர்த்து ப்ளெண்டர் கொண்டு அரைத்து கொள்ளவும். அதில் உங்களுக்கு தேவையான அளவு தேன் சேர்த்து பருகலாம்.
மேலும் படிக்க : உடல் எடை குறைப்பு, நீரிழிவை தடுக்கும் வீகன் டயட்முறை…
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.