Appam Recipe in Tamil: தென்னிந்தியாவில் இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை பிரபலமான காலை உணவுகளாக உள்ளன. அதிலும் குறிப்பாக ஆப்பம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக உள்ளது. இதற்கு காரணமாக இதன் (சாஃப்ட்) மிருதுவான தன்மையை குறிப்பிடலாம்.
இப்படியான சாஃப்டான ஆப்பம் தயார் செய்ய சிலர் தேங்காய், சோடா உப்பு, ஈஸ்ட் போன்றவற்றை மாவுடன் சேர்ப்பது உண்டு. ஆனால், நாம் இன்று தாயார் செய்ய உள்ள இந்த ஆப்பத்தில் எந்த பொருட்களையுமே சேர்க்க போவதில்லை. வெறும் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய மூன்று பொருட்களை மட்டுமே சேர்க்க உள்ளோம்.
இந்த 3 பொருட்களைக் கொண்டு எப்படி சுவையான மற்றும் சாஃப்டான ஆப்பம் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
‘ஆப்பம்’ செய்ய தேவையான பொருட்கள்:-
இட்லி அரிசி – ஒரு கப்
பச்சரிசி – ஒரு கப்
உளுந்து – ஒரு கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்.
ஆப்பம் – செய்முறை விளக்கம்:-
முதலில் 1 கப் இட்லி அரிசி மற்றும் பச்சரிசி எடுத்துக்கொள்ளவும். இவற்றை தண்ணீரில் நன்கு அலசி வைத்துக்கொள்ளவும்.
பிறகு இவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அவற்றுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெந்தயம் மற்றும் உளுந்து சேர்த்து நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக தான் ஊற வைக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
பிறகு அரைக்கும் போது அவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
இவை சுமார் 4 மணி நேரம் ஊறிய பின்னர், கிரைண்டரில் முதலில் உளுந்தை சேர்த்து அரைக்கவும். பொங்க பொங்க தண்ணீரை தெளித்து தெளித்து ஆட்டிக் கொள்ளவும்.
உளுந்து முக்கால் பாகம் நன்கு அரைபட்ட பிறகு அரிசியை சேர்த்துக் கொள்ளவும். இவை இரண்டும் நன்கு அரைப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
எந்த அளவிற்கு மாவு நைஸாக அரைக்கிறோமோ அந்த அளவிற்கு ஆப்பம் மெத்தென்று மிருதுவாக வரும்.
இவற்றை நன்கு அரைத்த பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
8 மணி நேரம் மாவு ஊறி நன்கு புளித்து பொங்கி வரும் மாவை ஆப்ப கடாயில் இட்டு, மெத்தென்று சூப்பரான மற்றும் சுவையான ஆப்பம் த யார் செய்யவும்.
இந்த அட்டகாசமான ஆப்பத்தை உங்களுக்கு பிடித்த சைடிஸ்களுடன் சேர்த்து உண்டு மகிழவும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil