/indian-express-tamil/media/media_files/2024/12/27/wzfFqxQjJBXgSK1KLR8l.jpg)
தன்னுடைய வேலை மற்றும் ஆரோக்கியத்திற்காக உடல் எடையை குறைத்ததாக அறந்தாங்கி நிஷா தெரிவித்துள்ளார். அதன்படி, உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதன் பின்னர் எடை குறைப்பிற்கான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
இதையடுத்து, பரிசோதனை மேற்கொண்டு நம் உடலில் சர்க்கரை, கொழுப்பு போன்றவை எந்த அளவிற்கு இருக்கிறது என தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் எடை எதனால் அதிகரித்தது என்று அறிய சுலபமாக இருக்கும். அதன்பின்னர், அதற்கு ஏற்றார் போல் டயட் இருந்து உடல் எடை குறைப்பில் ஈடுபடலாம்.
சர்க்கரை சேர்க்காமல் பிளாக் டீ, பிளாக் காபி, கிரீன் டீ ஆகியவற்றை குடித்ததாக அறந்தாங்கி நிஷா தெரிவித்துள்ளார். இவ்வாறு உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினால் முதல் 10 நாள்கள் கடினமாக இருக்கும் எனவும், அதன் பின்னர் நம் உடல் அதற்கு ஏற்றார் போல் பழகிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, ஒரு வெள்ளரிபழம், நெல்லிக்காய், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து அரைத்து காலை நேரத்தில் குடிக்கலாம். இதேபோல், ஒரு ஆப்பிள், ஒரு கேரட், ஒரு பீட்ருட் ஆகியவற்றையும் மிக்ஸியில் அரைத்து குடிக்கலாம்.
மதிய வேளையில் சப்பாத்தி, நிறைய காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடலாம் என அறந்தாங்கி நிஷா தெரிவித்துள்ளார். மேலும், உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல், எடை குறையும் போது அதிகப்படியான அளவில் குறையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 10 நாள்களில் சுமார் 1 கிலோ அளவில் தான் குறையத் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு 30 நாள்கள் தொடர்ந்து பின்பற்றினால் நிச்சயம் எடை குறையும் என்று அறந்தாங்கி தெரிவித்தார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.