Advertisment

அதிரசம் அவ்ளோ கஷ்டமில்லை: தீபாவளிக்கு இப்படி செய்து அசத்துங்க!

deepavali Athirasam in tamil: பாரம்பரியமிக்க இனிப்பு வகைகளில் ஒன்றாக அதிரசம் எப்படி தயார் செய்யலாம் என்பதற்கான சிம்பிள் டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Athirasam Recipe in Tamil: Traditional Adhirasam making In Tamil

Easy sweet recipes in tamil at home: தீபாவளி என்றதுமே அனைவருக்கும் பட்டாசுகளும் இனிப்பு வகைகளும் தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் நம்முடைய வீடுகளில் தயார் செய்யும் இனிப்பு வகைகளுக்கு எப்போதுமே தனி ருசி தான். குறிப்பாக அதிரசம் அதில் முக்கிய இடத்தை பிடிக்கிறது.

Advertisment

பாரம்பரிய திண்பண்டமான அதிரசத்தை வீட்டில் தயார் செய்ய இப்போது உள்ள தலைமுறைகளில் சிலர் சிரமப் படுகிறார்கள். உண்மையில் இவற்றுக்கு சேர்க்கும் பொருட்களை சரியான விகிதத்தில் சேர்த்தால் ரொம்பவே ஈஸியாகும். இப்போது அதிரசத்திற்கான எளிய செய்முறையை இங்கு பார்க்கலாம்.

publive-image

சுவையான அதிரசம் செய்யத் தேவையானப் பொருட்கள்

பச்சரிசி – 1 கப்

வெல்லம் – 3/4 கப்

ஏலக்காய் – 2

நல்லெண்ணெய் – சிறிதளவு <கப்பின் அளவு சரியாகஇருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்>

வீட்டிலே அதிரசம் தயார் செய்ய சிம்பிள் செய்முறை

அதிரசம் தயார் செய்ய முதலில் ஒரு கப் பச்சரிசியை எடுத்துக்கொள்ளவும். அவற்றை 2 அல்லது 3 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.

அரிசி நன்கு ஊறிய பிறகு அவற்றை 10 நிமிடங்களுக்கு காய வைக்கவும்.

அரிசி மொத்தமாக காயாமல் சற்று ஈரப்பதமாக இருக்கும் போது அவற்றை ஒரு மிக்சியில் இட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.

பிறகு, 3/4 கப் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு அதனுடன் 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி அதிரசத்திற்கான வெல்ல பாகினை தயார் செய்து கொள்ளவும்.

இப்போது அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் 2 ஏலக்காயை நசுக்கி அவற்றுடன் சேர்க்கவும்.

வெல்லப்பாகு சூடு ஆறுவதற்கு முன்பு, நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பச்சரிசி மாவை அவற்றுடன் கலந்து கொள்ளவும்.

பிறகு மாவு கெட்டியாக கட்டியாக மாறாத பதத்திற்கு நன்கு மிக்ஸ் செய்துகொள்ளவும்.

தொடர்ந்து மாவு மீது சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி 2 அல்லது 3 நாட்கள் அப்படியே மூடி வைக்கவும். குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது எனபதை கவனத்தில் கொள்ளவும்.

மூன்று நாட்களுக்கு பிறகு அதிரசமாவு சரியான பதத்தில் தயாராக இருக்கும். அவற்றை வட்டமாக தட்டி எண்ணெய்யில் இட்டு பொரித்து எடுக்கவும்.

அதிரசத்தை எண்ணெயில் இட்டு பொரித்து எடுக்கும் போது, அடுப்பபை மிதமான சூட்டில் வைக்கவும். அப்போதுதான் அவை நன்கு வெந்து இருக்கும்.

publive-image

எனவே, அதிரசத்தை பொறுமையாக எண்ணெயில் இட்டு எடுக்கவும். இப்போது நீங்கள் ஆவலோடு எதிர்பாத்த தீபாவளி இனிப்பு தயாராக இருக்கும் அவற்றை உங்கள் உற்றார் உறவினரோடு பகிர்ந்து ருசித்து மகிழவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Food Recipes Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment