குழந்தை முகம் மாறாமல் இருக்க....

அதே நிறம் குழந்தை வளரும் போதும் இருக்குமா என்றால் அது சந்தேகம் தான்.

உங்கள் குழந்தை முதல் மாத வாழ்க்கையில் தூங்கினால், நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் கண்டுபிடிக்க வேண்டும். நன்றாக உறங்கும் குழந்தையின் முகம் சிறு வயதில் இருந்தே பொலிவை பெறுகிறது என்று சமீபத்தில் நடந்த ஆராய்ச்சி ஒன்றில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சிறு வயது முதலே குழந்தையின் முகம் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் வளரும் பருவத்தில் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பிறந்த குழந்தைகள், பிங்க், ரோஸ், வெள்ளை, சிவப்பு இப்படி எல்லா வண்ணமும் கலந்த ஒருவித கலவைக் கலரில் இருப்பதுதான் இயல்பானது. ஆனால் அதே நிறம்  குழந்தை வளரும் போதும் இருக்குமா என்றால் அது சந்தேகம் தான்.

சரி, குழந்தையின் நிறத்தை சிறு வயதில் இருந்தே எப்படி பராமரிக்கலாம் என்று பார்ப்போமா???

1. எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைக்கும் போது வெதுவெதுப்பாக எண்ணெயை சூடுசெய்து ஆறவைத்து தேய்த்தல் நல்லது.

2. குழந்தை பிறந்த இரண்டு மூன்று நாட்களில், உடலில் இருக்கும் நீர் குறையத் தொடங்கியதும் குழந்தையின் எடையும் சற்று குறையும். அப்போதும் தோலின் நிறம் சற்று மங்கும். குழந்தை நன்றாகப் பால் குடிக்கத் தொடங்கியதும், உடல் எடை அதிகரிக்கும்போது, மேற்தோலும் மெருகேறும்.

3. சிறு குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது. அதில் உள்ள எண்ணெய்ப் பசையை அதிகமாக எடுத்துவிடக் கூடாது. சிறிது அமிலத்தன்மை உள்ள சோப் குழந்தைகளுக்கு நல்லது.

4. அதிகமாக நுரை இல்லாமலும் இருக்க வேண்டும். நிறம் இல்லாமலும் இருக்க வேண்டும்.

5. கொஞ்சம் வளர்ந்த பின்பு, இளநீரை கொண்டி அடிக்கடி முகத்தை துடித்து எடுக்க வேண்டும்.

6. மாவு கடலை மாவு போன்றவை உபயோகித்தால் தோல் கடினத் தன்மையை அடைகிறது.  இதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close