Aviyal recipe in tamil: நம்முடைய உணவுகலாச்சரம் பாரம்பரியமிக்கது மற்றும் தொன்றுதொட்டது என்றால் நிச்சயம் மிகையாகாது. இந்த பண்பாடு மிகுந்த உணவுகளை நம்முடை வீட்டு திருமண மற்றும் அனைத்து சுபவிசேஷங்களிலும் கண்டிப்பாக இடம்பெறும். அந்த உணவு வகைகளில் அவியல் முக்கிய இடத்தை பிடிக்கும்.
Advertisment
பல்வேறு காய்கறிகளை கொண்டு தயார் செய்யப்படும் அவியல் உடலுக்கு நல்ல சக்தியை தரும் ஒரு உணவு வகையாகும். மேலும் ருசி மிகுந்த கூட்டு வகைகளில் அவியலும் ஒன்றாகும். இந்த சுவைமிகுந்த காய்கறி அவியலை எப்படி தயார் செய்வது என்று இங்கு பார்க்கலாம்.
அவியல் செய்யத் தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
கத்திரிக்காய் – 4 முருங்கைக்காய் – 1 புடலங்காய் – சிறிய துண்டு சேனைக்கிழங்கு – சிறிய துண்டு வெள்ளபூசணி – சிறிய துண்டு பீன்ஸ் – 5 வாழைக்காய் – சிறிய துண்டு கேரட் – சிறிய துண்டு கொத்தவரங்காய் – 4 மாங்காய் – சிறிய துண்டு தேங்காய் எண்ணெய் – தேவைக்கேற்ப கறிவேப்பிலை – சிறிதளவு துருவிய தேங்காய் – 1/2 கப் பச்சைமிளகாய் – 3 சீரகம் – சிறிதளவு பூண்டு – 1 பல் உப்பு – தேவையான அளவு
அவியல் செய்முறை:
சுவைமிகுந்த அவியல் தயார் செய்ய முதல் மேலே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை நறுக்கிக்கொள்ளவும்.
பிறகு ஒரு காடாய் எடுத்து அவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
பின்னர் தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு அரைக்கவும்.
தொடர்ந்து அரைத்த தேங்காயை வேகவைத்த காய்கறியுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு, உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி பிரட்டிக் கொள்ளவும்.
சில நிமிடங்களுக்கு சூடேற்றி கீழே இறக்கினால் சுவையான அவியல் தயாராக இருக்கும்.
இப்போது அவற்றை சூடான சாதத்துடன் சேர்த்து ருசித்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“