Advertisment

இரவில் ப்ளீஸ் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க....

இரவு ஒன்பது மணிக்கு மேல் பால் குடிப்பதை கண்டிப்பாக  தவிர்க்க வேண்டும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இரவில் ப்ளீஸ் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க....

இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முக்கியமாக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும். காலையிலும் மதியமும் சாப்பிட்டு விட்டு வேலை செய்வதால் அந்த உணவு விரைவில் ஜீரணமாகி விடுகிறது. ஆனால் இரவு உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கதானே செல்கிறோம் என்று மிகக் குறைந்த அளவிலான உணவோ அல்லது சாப்பிடாமலோ தூங்கினால் உடல் எடை குறையும் என்ற கருத்து எல்லோரிடமும் இருந்து வருகிறது.

Advertisment

இரவு நேரத்தில் எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது, எதை சாப்பிடலாம் என்பதில் சிறிது குழப்பம் இருக்கும். சிலர் எடையைக் குறைப்பதற்கு இரவு நேரத்தில் சாப்பிடாமல் பட்டினி கிடப்பார்கள். ஆனால் இப்படி பட்டினி கிடப்பதால் மட்டும் உடல் எடையைக் குறைத்துவிட முடியும் என்று நினைக்காதீர்கள். இரவு நேரத்தில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் இவை மட்டுமே.. இது ஆரோக்கியத்திற்கும் பொருந்தும்.. டயட்டில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

1. இரவு நேரங்களில் இனிப்பான உணவுகளை ஒதுக்க வேண்டும். இரவு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம்.

2.கீரையை இரவு உணவாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், இரவில் கீரையை எடுத்துக்கொள்வதால் உடலுக்கு, தேவைக்கும் அதிகமான கலோரி கிடைக்கிறது. அதிக கலோரி வயிற்றை அசெளகர்யம் அடையச்செய்கிறது. இதனால், செரிமானக் கோளாறு ஏற்படும்.

3. முழு சாப்பாடு, அதிகப்படியான உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். இது உங்கள் உடல் எடையை மிக விரைவாக அதிகரிக்க செய்யும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

4. இறைச்சியில் அதிக அளவிலான புரோட்டினும் கொழுப்புச்சத்தும் உள்ளன. எனவே,  இதைச் செரிக்க அதிக நேரம் எனர்ஜி தேவைப்படும். இரவு நேரத்தில் அத்தகைய ஆற்றல் கிடைக்காது. வாய்வுத்தொல்லை உருவாகும்.

5.  இரவு ஒன்பது மணிக்கு மேல் பால் குடிப்பதை கண்டிப்பாக  தவிர்க்க வேண்டும்.

6. இரவில் நூடூல்ஸ்,  மேகி போன்ற துரித உணவுகளை  கண்டிப்பாக இரவில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

7. 40 வயதிற்கு மேற்பட்டோர் இரவில் மட்டன் எடுத்துக் கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

Food Tips Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment