scorecardresearch

2018 Ayudha Pooja Timings: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உகந்த நேரம் எது?

2018 Ayudha Pooja Timings, Saraswathi Pooja Time, Vijayadashami 2018 Pooja Date: ஆயுதபூஜைக்கு இன்று (அக்டோபர் 18) பிற்பகல் 2.06 மணி முதல் 2.52 மணி வரை சாமி கும்பிட நல்ல நேரம்.

Ayudha Pooja , Saraswathi Pooja , Vijayadashami political party leaders tweets
Ayudha Pooja , Saraswathi Pooja , Vijayadashami political party leaders tweets

2018 Ayudha Pooja, Saraswathi Pooja, Vijayadashami Timings: சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் அலங்கரிக்கப்பட்டன. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடுகிறவர்கள், எந்த நேரத்தில் கொண்டாட வேண்டும் என்பதிலும் ஆர்வம் செலுத்துவதுண்டு. அந்த வகையில் ஜோதிடக் கலை வல்லுனர்கள் கணித்த நேரம் இங்கே தரப்படுகிறது.

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும். இன்று (அக்.18) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள், புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.

Read More: சரஸ்வதி பூஜை – ஆயுத பூஜை வாழ்த்து மெசேஜ் எப்படி இருக்க வேண்டும்?

இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஆயுதபூஜைக்கு இன்று (அக்டோபர் 18) பிற்பகல் 2.06 மணி முதல் 2.52 மணி வரை சாமி கும்பிட நல்ல நேரம் உள்ளது. இதே போல அக்டோபர் 19ம் தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அன்று ஒரு சிலர் காலையிலும், சிலர் மாலையிலும் அன்னையை வணங்குவார்கள். பிற்பகல் 2.05 மணி முதல் 2.51 மணிவரை சாமி கும்பிட நல்ல நேரமாகும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Ayudha pooja saraswathi pooja timings

Best of Express