தேசிய சுகாதார ஆணையம் தான் AB-PMJAY திட்டத்தை செயல்படுத்துவதற்கான அங்கீகாரம் பெற்ற நிறுவனம். https://ayushman-yojana.org/ என்ற இந்த வலைதளம் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக எங்கள் குறிப்புக்கு வந்துள்ளது என்று தேசிய சுகாதார ஆணையம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது. @AyushmanNHAன் அதிகாரப்பூர்வ வலைதளம் https://pmjay.gov.in. தான் மேலும் எங்களுக்கு வேறு எந்த வலைதளமும் இல்லை என்பதை தயவு செய்து கவனிக்கவும்” என்று கூறியுள்ளது.
இந்த வகை சேமிப்புகளில் இப்போது பணம் எடுக்கலாமா? அவசியமான டிப்ஸ்
தற்போதைய இந்த கரோனா வைரஸ் பரவல் காலத்தில் கோவிட் தொடர்பான சிகிச்சைகளுக்கும் கோவிட் அல்லாத பிற சிகிச்சைகளை அளிப்பதற்கும் தேசிய சுகாதார ஆணையம் தனது மருத்துவமனை நெட்வொர்க்கை வலுப்படுத்தியுள்ளது. தற்போது உள்ள இந்த ஊரடங்கு காலத்தில் தேசிய சுகாதார ஆணையம் 1000 க்கும் அதிகமான புதிய மருத்துவமனைகளை தனது பட்டியலில் சேர்த்துள்ளது.
ஒவ்வொரு குடும்பத்துக்கு வருடத்துக்கு ரூபாய் 5 லட்சம் வரை இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனை உள்ளிருப்பு சிகிச்சை பெறுவதற்கான மருத்துவ காப்பீட்டு பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசின் முதன்மை திட்டமான AB-PMJAY துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 10.74 கோடி ஏழை மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் (53 கோடி பயனாளர்கள்) பயன்பெறுவார்கள். AB-PMJAY திட்டம் 2018 செப்டம்பரில் தொடங்கப்பட்டது, அதிலிருந்து ரூபாய் 13,000 கோடி மதிப்பிலான 96 லட்சம் மருத்துவமனை சிகிச்சைகள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 12 கோடிக்கும் அதிகமான மின்னணு அட்டைகள் (e-cards) 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திட்டத்தின் செயல்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”