Baakiyalakshmi Serial Divya Ganesh Fitness Secrets Tamil News : சுமங்கலி தொடரில் ஸ்லிம் நாயகியாக அறிமுகமானவர், இடையில் எடை அதிகரித்து, தற்போது பாக்கியலட்சுமி தொடரில் மீண்டும் அதே ஸ்லிம் ஹீரோயினாக வலம்வந்துகொண்டிருக்கிறார் திவ்யா கணேஷ். மிகவும் எளிமையான முறையில் ஏறிய உடல் எடையைக் குறைத்திருப்பவர், தன்னுடைய ஃபிட்னெஸ் சீக்ரெட் பற்றி சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.

“உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்று முடிவு செய்தால் அதிலிருந்து பின் வாங்கவே கூடாது. இதுதான் முதல் ரூல். நிறையப் பேர் உடலெடையை குறைக்கவேண்டும் என்று சொல்லி இரண்டு மூன்று நாள்கள் உடற்பயிற்சி, டயட் போன்றவற்றைப் பின்பற்றுவார்கள். ஆனால், அதன்பிறகு அதனை சரியாகப் பின்பற்ற மாட்டார்கள். உடல் எடை குறைக்க மனஉறுதி அவசியம்.

ஒர்க் அவுட்ல நான்லாம் நல்லா ஏமாத்துற ஆளு. என்னுடைய ட்ரெயினர் என்னை விட்டு கொஞ்சம் வேறு பக்கம் திரும்பினாலும், நான் ரெஸ்ட் எடுக்கத்தான் பார்ப்பேன். அப்படிப்பட்ட நான், லாக்டவுனில் எந்த அளவிற்கு இருந்திருப்பேன் என்று நினைத்துப் பாருங்கள். என்றாலும், சின்னசின்ன ஒர்க் அவுட் செய்தேன். சைக்கிளிங் செய்தேன். அதுவும் இரவு நேரங்களில்தான் சென்றேன். ஆனால், ஜிம் திறந்துவிட்டால் போதும் ஷூட்டிங் நாள்களிலும் காலையிலேயே கண்டிப்பாக ஜிம் சென்றுவிடுவேன்.

முன்பெல்லாம், எப்படியாவது உடல் எடையைக் குறைத்து விடவேண்டும் என்கிற நோக்கிலேயே ஜிம்முக்கு இரண்டு முறை செல்வேன். ஆனால், கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லை. அப்புறம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், என்னுடைய கடமையை மட்டுமே செய்துகொண்டிருந்தேன். திடீரென ஒருநாள், ‘என்ன வெயிட் லாஸ் ஆகிட்ட?’ என்று நிறையப் பேர் கேட்க ஆரம்பித்தனர். அப்போதுதான், நான் ஜிம்முக்கு போன பலன் கிடைத்துவிட்டது என்று நினைத்தேன். அதனால், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தால் நிச்சயம் சர்ப்ரைஸ் வரும்.

அடுத்தபடியாக டயட். இதனைப் பின்பற்றுவது மிகவும் கடினம். எனக்கு சோறு என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால், உடல் எடையைக் குறைக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் அவற்றைத் தவிர்க்கவேண்டிய சூழ்நிலை. ஆனால், சாப்பிடணும்னு தோணுச்சுனா கண்டிப்பாக சாப்பிடுவேன். காலை எழுந்ததும் காபி அவசியம். பிறகு, வரிசையாக டயட் பிஸ்கட், நட்ஸ், முளைகட்டிய பயிர் வகைகள், முட்டை என அடுத்தது சாப்பிட்டுக்கொண்டே இருப்பேன்.

மதிய வேளையில், காய்கறி, பழங்கள், மோர், க்ரில் சிக்கன் என சாப்பிடுவேன். சாப்பாடு மட்டும் தவிர்த்துவிடுவேன். சில சமயங்களில் என்னுடைய டயட் உணவைத் தயார் செய்வதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அடுப்பு, குக்கர் எல்லாவற்றையும் எடுத்துச் செல்வேன். முன்பு தண்ணீர் அதிகம் குடிக்கவே மாட்டேன். ஆனால், இப்போது அலாரம் வைத்துக் குடிக்கிறேன். அந்த அளவிற்கு நம் உடலுக்கும் சருமத்திற்கும் தண்ணீர் அவசியம் என்பதை உணர்ந்தேன். எனவே, நீங்களும் நிறையத் தண்ணீர் குடியுங்கள்.
நிறைய பேருக்கு பீரியட்ஸ்ல நேரத்தில் ஒர்க் அவுட் பண்ணலாமா என்கிற கேள்வி எழும். என் உடல்நிலை ஒர்க் அவுட் செய்வதற்கு ஏதுவாக இருக்காது என்பதால், நான் செய்யமாட்டேன். உங்களால் முடியும் என்றால் செய்யுங்கள். இல்லை என்றால் ரெஸ்ட் எடுப்பது சிறந்தது. அதேபோல, பீரியட்ஸ் நேரத்தில் நான் டயட் எதுவும் பின்பற்ற மாட்டேன். பிடித்ததை முழுமையாக சாப்பிடுவேன்” என்று நிறைவு செய்கிறார் திவ்யா கணேஷ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil