ஒருவர் தினசரி,ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சமமாய் உட்கொள்ள வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொருநாளும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம். மேலும் நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். சீரான இயக்கத்திற்கு தினமும் நிறை உணவுகள் அவசியம். 2010 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், மிக குறைந்த அளவு பழங்கள்,காய்கறிகள் சாப்பிட்டதால் 1.8 மில்லியன் மக்கள் இருதய நோய் காரணமாக மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தெற்காசியா, கிழக்காசியா மற்றும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் காய்கறிகள் மற்றும் பழங்களின் பயன்பாடு மிகவும் குறைவாக இருந்திருக்கிறது. இதன் காரணமாகவேதான் இந்த நாடுகளில் இறப்பின் விகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பழங்கள் நிறைய சாப்பிடுவதால் வைட்டமின் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடுகின்றன. இந்த ஆய்வின் தகவல்படி பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.