Banana Chips Tamil, How to make banana chips Video: நேந்திரன் வாழைப்பழத்தில் செய்யப்படும் சிப்ஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தான் அதிகமாக கிடைக்கும். குறிப்பாக இந்த சிப்ஸை கேரளாவின் சிறப்பு தினங்களில் அதிகமாக காணலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் இது.
Advertisment
ஆரோக்கியமான தின்பண்டங்களில் ஒன்று நேந்திரம் சிப்ஸ். அதில் சேர்க்கப்பட்டுள்ள உப்பும் காரமும் உண்டாக்கும் சுவையால் அனைவரும் அதை சிறந்த மாலைநேர தின்பண்டமாக எடுத்துக்கொள்ளலாம்.
How to make banana chips- Video: வாழைக்காய் சிப்ஸ்
இதை தேனில் ஊற வைத்தும் சாப்பிடலாம். அனைவரும் உண்ணக்கூடியது. இதை தேங்காய் எண்ணெய்யில் தான் பொறிப்பார்கள். தேங்காய் எண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது. இதை வீட்டில் செய்வது மிகவும் எளிது.
நேந்திரம் சிப்ஸ் செய்முறை
செய்ய தேவையான பொருட்கள்:
நேந்திரங்காய் -3
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
உப்பு -1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய்
செய்முறை :
ஒரு வாழைப்பழத்தை எடுத்து உலர வைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி கொதிக்க வைத்து அதில் மிதமான சூடு வந்தவுடன் துண்டுகளை எண்ணெயில் போட்டு விட வேண்டும். சில வினாடிகள் கழித்து மஞ்சள்தூள் கலந்த தண்ணீரை எண்ணெயில் கலந்து கிளறிவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து சிப்ஸை எடுத்துவிடலாம்
இவ்வாறு எண்ணெயில் இருந்து எடுத்தவுடன் அதை ஒரு காகிதத்தின் மேல் வைத்தால் தேவை இல்லாத எண்ணெய் வெளியேறிவிடும். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது தனியாக தேனீருடன் சாப்பிடலாம்.
வீட்டில் வாழைப்பழ சிப்ஸ் செய்யும் முறை :
அதிகம் பழுத்த பழத்தை பயன்படுத்தக்கூடாது, பொறிப்பதற்கு முன் அதில் உப்பு போடக்கூடாது. அதே போல், எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். வெட்டி வைத்துள்ள வாழை பழ துண்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட வேண்டும். அதன் வண்ணம் மாறுவதை வைத்து சிப்ஸ் தயாராகிவிட்டதை அறிந்து கொள்ள முடியும். பொறித்து எடுத்தவுடன் சூடாக இருக்கும் போது அதில் மிளகாய் துாள் தூவிவிட வேண்டும்.
இப்படி செய்தீர்கள் என்றால், சுவையான நேந்திரம் சிப்ஸ் ரெடி!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"