குளிர்காலத்தில் அக்கரையுடன் சருமத்தை பாரமரிக்க வேண்டும். தவறினால் சருமம் வறண்டு, அரிப்பு மற்றும் வெடிப்பு ஏற்படலாம்.
உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் அளவில் சில இயற்கையான பொருட்கள் உள்ளன. மேலும் நம் வீட்டிலேயே இருக்கும் இயற்கையான பொருட்களை வைத்தும் நமது சருமத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
சருமத்தைப் பராமரிக்கும் அந்தப் பொருட்கள்
தேன்
ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் ஃப்ரஷ் க்ரீம் கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடலாம். இந்த மாஸ்க்கை தொடர்ந்து முகத்தில் போட்டு வர சருமம் மிருதுவாக இருக்கும். அதே போல் தேனை மட்டும் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து 5 நிமிடம் கழித்து முகம் கழுவினாலும் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும்.
பாதாம்
பாதாம், சருமத்தை பாதுகாப்பதில் தனித்துவம் மிக்கது. பாலுடன், அரைத்த பாதாமை முகத்தில் ஸ்கரப் போல் தேய்த்துக் கழுவலாம். அல்லது பாதாம் மாவுடன் ஓட்ஸ், அரிசி மாவு மற்றும் பால் கலந்தும் ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம். முட்டி, முழங்கால் உள்ள கறுமையை நீக்கவும் இது பயன்படுகிறது. தவிர, பாதாம் பருப்பை அரைத்து முகத்திற்கு ஸ்கரப்பாகவும் பயன்படுத்தலாம்.
மயோனைஸ்
மயோனைஸ்ஸை முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகம் கழுவுங்கள். இது ஒரு முழுமையான ஃபேஷ் மாஸ்க்காக நிச்சயமாக இருக்கும். சருமமும் பொலிவு பெறும்.