பருக்கள் விட்டுச் சென்ற தழும்பில் இருந்து தப்பிக்கணுமா???? இதை செய்து பாருங்கள்!

இயற்கை வழிகளை கையாண்டால் , தழும்புகளை விரட்டுவது இன்று மிகவும் சுலபம்.

முகப்பருக்கள் இல்லாத முகம் வேண்டும் என்று ஏங்காத  ஆண்கள் மற்றும் பெண்கள் ரொம்பவும் குறைவு. ஒருவரது முகத்தில் பருக்கள் இருந்தால், அது அவர்களது தோற்றத்தையே அசிங்கமாக காட்டும். கப்பரு வருவதை விட வந்தபின் அது விட்டுச் செல்லும் தழும்புகள் முக அழகையே பாழ்படுத்தும்.

ஒருவரது முகத்தில் பருக்கள் வந்தால், பலரது மனதிலும் முதலில் எழுவது, இதை எப்படி விரட்டுவது என்பது தான். இன்றைய நவீன பெண்களுக்கு பருக்கள் வர பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், அதை விரட்ட அவர்கள் எடுக்கும் முயற்சிகள் மிகவும் குறைவு. முறையான இயற்கை வழிகளை கையாண்டால் , தழும்புகளை விரட்டுவது இன்று மிகவும் சுலபம்.

1. ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு முகத்தை அன்றாடம் சுத்தம் செய்யுங்கள். இதனால் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதோடு, அதிகப்படியான எண்ணெய் பசையும் நீங்கி, தழும்புகள் இருந்தாலும் மறைந்துவிடும்.

2. முகப்பரு அதிகம் இருந்தால், நற்பதமான வேப்பிலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, பருக்களின் மீது தடவி, சிறிது நேரம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

3. பூண்டை அரைத்து பேஸ்ட் செய்து, பருக்களின் மீது தடவி 2-3 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதனால் பருக்கள் மட்டுமின்றி, தழும்புகளும் நீங்கும்.

4. உப்பை நீரில் கலந்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து நீரால் அப்பகுதியைத் தேய்த்து கழுவுங்கள்.

5. காய்ந்த அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்துகொள்ளுங்கள். இதனுடன் தேங்காய் எண்ணைய் கலந்து, இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறையும்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close