Beetroot recipes in tamil: மாலை நேர ஸ்நாக்ஸ்களில் பஜ்ஜிகளுக்கு என தனி இடம் உண்டு. இந்த சூடான பஜ்ஜிகளுடன் தரப்படும் டேஸ்டி சாம்பார், சட்னிகளுக்காகவே பஜ்ஜிகளை ருசிக்கும் மக்கள் பலர். அப்படியான இந்த பஜ்ஜிகளில் பல வகைகள் உள்ளன. அதில் வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி போன்றவை பிரபலமானவை ஆகும்.
Advertisment
அந்த வகையில், இவற்றில் வரும் மற்றொரு வெரைட்டியான பீட்ரூட் பஜ்ஜி எப்படி சிம்பிள் செய்முறையில் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
பீட்ரூட் பஜ்ஜி தயார் செய்யத் தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
கடலை மாவு - 1 கப், பீட்ரூட் - 100 கிராம் அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன், காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன், பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவிற்கு எண்ணெய் - தேவையான அளவிற்கு.
பீட்ரூட் பஜ்ஜி சிம்பிள் செய்முறை:
முதலில் பீட்ரூட்டை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டிகொள்ளவும்.
பிறகு, பீட்ரூட்டை வில்லைகளாக நறுக்கி தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சிறிது நேரம் போட்டு எடுக்கவும் .
பீட்ரூட் ஈரப்பதம் இல்லாமல் இருந்தால்தான் பஜ்ஜி எண்ணெய் குடிக்காது என்பதை மனதில் கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவை சேர்த்து அதனுடன் அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய்த்தூள், பேக்கிங் சோடா, பெருங்காயம், உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் அவற்றுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பீட்ரூட் வில்லைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பாத்த டேஸ்டியான பீட்ரூட் பஜ்ஜி தாயார். இவற்றுடன், தேங்காய், கார சட்னி அல்லது சாம்பார் சேர்த்து ருசிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“