வாய்ப் புண் முதல் எடைக்குறைப்பு வரை… கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது?

Healthy food news in tamil: கறிவேப்பிலையில் ஃபைபர், புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உள்ளது எனவும், உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை சிக்கல்களையும் நிர்வகிக்க உதவுகின்றன எனவும் மருத்துவர் டிக்சா பாவ்சர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

benefits curry leaves tamil news, benefits of curry leaves and how to use them
benefits curry leaves tamil news, benefits of curry leaves and how to use them.

 Benefits curry leaves tamil news: கறிவேப்பிலை அல்லது கறி இலைகள் சமையல் பயன்பாடுகளைத் தவிர, மருத்துவ குணம் வாய்ந்த ஒன்றாகவும் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கபதோடு தோல் மற்றும் முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகின்றன. இவற்றில் ஃபைபர், புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உள்ளது எனவும், கறி இலைகள் – உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை சிக்கல்களையும் நிர்வகிக்க உதவுகின்றன எனவும் மருத்துவர் டிக்சா பாவ்சர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முடி உதிர்தல் மற்றும் முன்கூட்டியே நரைப்பதற்கான தீர்வு

எப்படி செய்வது?

1-2 கப் தேங்காய் எண்ணெய் அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த எண்ணெயை வேண்டுமாலும் எடுத்துக்கொள்ளலாம். அதில் ஒரு சில கறிவேப்பிலையையும் எடுத்துக் கொள்ளுங்கள் (நீங்கள் விரும்பினால் அம்லாவைச் சேர்க்கலாம்). இலைகள் மற்றும் எண்ணெய் கரையும் வரை அவற்றை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அவற்றை சிறிது சிறிதாக குளிர்ந்து விடவும், அதன் பின் கலவையை ஒரு கண்ணாடி கொள்கலனில் மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.

எப்படி பயன்படுத்துவது?

உங்களுடைய தலைமுடியை வெவ்வேறு பிரிவுகளாக பிரித்து, வேர் முதல் நுனி வரை கறி முடி எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். அதன் பின் ஓர் இரவு முழுதும் நன்றாக உலர விடவும். மறுநாள் உங்கள் தலைமுடியில் லேசான ஷாம்பூ சேர்த்து குளிக்க வேண்டும்.

எடை குறைப்பு

10 முதல் 20 கறிவேப்பிலை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். சில நிமிடங்களுக்குப் பிறகு, இலைகளை அகற்றி தேயிலை போல் வடிகட்டவும். அதன் சுவையை அதிகரிக்க தேன் மற்றும் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்க்கவும்.

கறிவேப்பிலை தேநீர் உங்கள் கொழுப்பை எரிக்க வல்லது என்று மருத்துவர் பாவ்சர் கூறுகிறார்.

வாய் புண் நீக்கி

தேனுடன் கலந்த கறிவேப்பிலை தூளை வாய் புண் மீது தடவலாம். 2-3 நாட்களில், இது வாய் மற்றும் உதடுகளின் அழற்சியான ஸ்டோமாடிடிஸை நீக்குகிறது.

நீரிழிவு நோய், கொழுப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கிய நன்மைகள்

நீங்கள் காலையில் 8-10 புதிய கறி இலைகளை முதலில் சாப்பிடலாம். அல்லது இலைகளை ஜூஸ் செய்து குடிக்கலாம். அவற்றின் நன்மைகளை அனுபவிக்க குழம்புகளில், அரிசி உணவுகளில் மற்றும் சாலட்களில் சேர்க்கவும்.

கறிவேப்பிலை ஆல்பா-அமிலேஸ் எனப்படும் சக்திவாய்ந்த நொதியை வெளியிடுவதாக அறியப்படுகிறது. இது குளுக்கோஸை உடைக்கிறது. எனவே, இது இயற்கையான இரத்த சர்க்கரையை சீராக்குகிறது. ஆயுர்வேதத்தின்படி, கசப்பு இனிமையை எதிர்த்து நிற்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்து ஆகும். இதில் கசப்பு தன்மை நிறைந்து காணப்படுவதால், கல்லீரலில் ஏற்படும் செரிமான பிரச்சினைகளுக்கும் உதவுகிறது” என்று மருத்துவர் பாவ்சர் கூறுகிறார்.

 

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Web Title: Benefits curry leaves tamil news benefits of curry leaves and how to use them

Next Story
45 வயதிலும் டீனேஜ் பெண்ணைப்போல் மிளிரும் ஷில்பா ஷெட்டி.. இவரின் பியூட்டி சீக்ரெட் என்ன?Shilpa Shetty Kundra Beauty Secrets Beauty Tips Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com