Benefits of Black pepper Tamil News: மசாலாப் பொருட்களின் ராஜா என்றும் அழைக்கப்படும் “மிளகு” உலகின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். 4000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட இது, இந்தியாவின் மலபார் கடற்கரைக்கு சொந்தமானது. மிளகுக்கான தேடல்தான் ஆரம்பகால மேற்கத்திய மாலுமிகளை கிழக்கு நோக்கி ஈர்த்தது.
அந்த காலங்களில் மிளகு மிக முக்கியமான பொருளாக பார்க்கப்பட்டுள்ளது. இவை நாணயமாகவும், வரதட்சணை வழங்குவதற்கும், வரி மற்றும் வாடகை கட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘மிளகு’ என்ற பெயர் பெர்ரி என்று பொருள்படும்‘பிப்பாலி’ என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது.
கருப்பு மிளகின் மருத்துவ பண்புகள் குறித்து இங்கு காணலாம்
கருப்பு மிளகில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளதால், இதை பல கலாச்சாரங்களில் நாட்டுப்புற மருந்தாக பயன்படுத்துகின்றனர். கருப்பு மற்றும் வெள்ளை மிளகு ஆகிய இரண்டிலும் இரசாயன மற்றும் பைபர்கள் மிகுந்துள்ளன. மேலும் ஏராளமான உடலியல் மருந்து போன்ற செயல்களைக் கொண்டுள்ளது.
கருப்பு மிளகில் உள்ள பைபர்கள் செரிமானப் பாதையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்று சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இவை ஆண்டிபயாடிக் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகள், ஆக்ஸிஜனேற்ற பண்புகள், புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகள் மற்றும் எடை இழப்புக்கு கூட உதவக்கூடும் என்பதற்கான ஆதாரங்களையும் வழங்குகின்றன.
சுவாரஸ்யமாக, கருப்பு மிளகுகள் டெங்குக்கு எதிராக லார்விசைட் எதிர்ப்பு விளைவைக் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மிளகு உட்கொண்ட பிறகு உருவாகும் வாசம், கொசுக்களை விரட்டுகிறது என்ற கிழக்கு ஆபிரிக்கர்கள் நம்புகிறார்கள். டெங்கு தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டு வர கருப்பு மிளகு ஒரு சிறந்த மூலிகை மருந்தாக பயன்படுத்துவதை சுகாதார அதிகாரிகள் கருத்தில் கொள்வது மிக்க நல்லது.
செரிமான தூண்டுதல்களாக செயல்படும் பல மசாலாப் பொருள்களைப் போலவே, மந்தமான செரிமானம், வாய்வு, வீக்கம், பசியின்மை மற்றும் வாயு பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கருப்பு மிளகு பயன்படுத்தப்படுகிறது. கணையத்தின் செரிமான நொதிகளை பைபரின் சாதகமாக தூண்டுகின்றன மற்றும் செரிமான திறனை மேம்படுத்துகின்றன என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இவை குமட்டலுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கருப்பு மிளகு சாற்றில் வலுவான ஆன்டி-ஆக்ஸிடன்ட் செயல்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இது புற்றுநோய் தடுப்பு, அழற்சி எதிர்ப்பு விளைவுகள் மற்றும் நோயெதிர்ப்பு-மாடுலேட்டரி செயல்பாடு உள்ளிட்ட நீண்டகால சுகாதார நலன்களை வழங்கக்கூடும்.
வீரியம் மிக்க மார்பக புற்றுநோய் உயிரணுக்களில் பைபரின் பாதிப்புகளைத் தீர்மானிக்க 2010 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இது சாதாரண உயிரணுக்களுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தாமல் மார்பக ஸ்டெம்-செல் புதுப்பித்தலைத் தடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இவை புற்றுநோயைத் தடுக்கும் முகவராக இருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் நடந்த மற்றொரு ஆய்வில், கருப்பு-மிளகு சாறு இயற்கை உயிரணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, சக்திவாய்ந்த புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் கட்டி எதிர்ப்பு விளைவுகளைக் காட்டுகிறது என்று முடிவு செய்துள்ளது.
அதே ஆண்டு நடத்தப்பட்ட ஒரு விலங்கு ஆய்வில், கருப்பு மிளகு மற்றும் அதன் சாறுகள் பைப்பரின் ஊட்டப்பட்ட குழுவில் உள்ளுறுப்பு கொழுப்பு கணிசமாகக் குறைந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது.
ஹோவர், பைபரின் பல மருந்துகளின் விளைவுகளை மாற்ற முடியும். எனவே, சிகிச்சையளிக்கும் அளவுகளில் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு தகுதி வாய்ந்த நிபுணரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)