Eggs For Diabetes: தினம் முட்டை சாப்பிட்டால் ஆண்களுக்கு என்ன பலன் தெரியுமா? மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவு

Egg-Rich Diet Helps to Keep Diabetes Away Study: தினம் ஒரு முட்டை சாப்பிடுவது ஆண்களின் உடலை டைப் 2 நீரிழிவில் இருந்து பாதுகாக்கும்

Egg-Rich Diet Helps to Keep Diabetes Away Study: தினம் ஒரு முட்டை சாப்பிடுவது ஆண்களின் உடலை டைப் 2 நீரிழிவில் இருந்து பாதுகாக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
benefits of eggs

benefits of eggs

An Egg a Day May Help Keep Diabetes Away: தம்பி... தினமும் முட்டை சாப்பிடாத... அதுல கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கும்... அது உடம்புக்கு நல்லதுல்லன்னு யாராச்சும் சொன்னா, நல்லா முறைச்சு பார்த்துட்டு திரும்பி வந்துடுங்க... ஏன்னா, தினமும் முட்டை சாப்பிட சொல்லி நாம சொல்லல... புதிய ஆய்வு முடிவு சொல்லுது.

Advertisment

கிழக்கு ஃபின்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டெஃபானியா நோர்மன் நடத்திய ஆய்வு முடிவின் படி, தினம் ஒரு முட்டை சாப்பிட்டால், ஆண்களுக்கு டைப் 2 நீரிழிவு பாதிப்பு அடியோடு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்களை நான்கு பிரிவுகளாக பிரித்து, இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல... 20 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், தினம் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தவர்களுக்கு டைப் 2 நீரிழிவு பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டது. அதுவே, வாரத்திற்கு 2 முட்டைகள் மட்டும் சாப்பிட்டு வந்தவர்களுக்கு பாதிப்பில் முன்னேற்றமில்லை.

எனவே, தினம் ஒரு முட்டை சாப்பிடுவது ஆண்களின் உடலை டைப் 2 நீரிழிவில் இருந்து பாதுகாக்கும் என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

மேலும் படிக்க - வாக்கிங் போயிட்டு 3 வடையை உள்ளே அமுக்குபவரா நீங்க?

முட்டையின் மேலும் சில பயன்கள் என்னென்ன தெரியுமா?

ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். இதிலிருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும். முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும்.

எனவே, தினசரி நம் உணவில் தாராளமாக முட்டையை சேர்த்துக்கொள்ளலாம் ப்ரோ!

Healthy Life

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: