எடை குறைப்பு முதல் ஞாபகசக்தி வரை… அவசியமான புதினா; பயன்படுத்துவது எப்படி?

Benefits of pudina or mint :

புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும்.  கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புதினாவின் முக்கிய மருத்துவ நன்மைகள் இங்கே:

* செரிமானத்திற்கு உதவுகிறது – புதினாவில்  ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மெந்தால்,  பைடோ நியூட்ரியண்ட்ஸ் ஆகியவை நிறைந்துள்ளது.  இது, செரிமான நொதிகள் மூலம் உணவு மூலக்கூறுகளை  சிதைக்கப்படுவதை வேகப்படுத்துகிறது. புதினாவில்  உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் விளைவுகளைக் கொண்டுள்ளன. அவை, வயிற்றுவலி, வயிற்றுப் பிடிப்பு, வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும்.

ஆஸ்துமா சிகிச்சை – புதினாவில் உள்ள மெத்தனால்  நுரையீரலில் சேகரிக்கப்பட்ட சளியை தளர்த்த உதவுகிறது. மேலும், மூக்கில் உள்ள சவ்வுகளை சுருக்கி, சுவாசிப்பதை எளிதாக்குகிறது. அதே நேரத்தில், அதிகளவு புதினாவை உட்கொள்ள கூடாது. உடலின் மூச்சுவிடலுக்கான பாதையில் எரிச்சல் ஏற்படாலம்.

* தலைவலி குணமாகும் – புதினாவில் உள்ள மெந்தால் தசைகளைத் தளர்த்தவும் வலியைக் குறைக்கவும் உதவுகிறது.தலைவலியிலிருந்து நிவாரணம் கிடைக்க நெற்றியில் புதினா நீரை தேய்த்துக் கொள்ளலாம். மேலும்,  புதினா தைலம் தலைவலியைக் குணப்படுத்துகிறது.

 

* மன அழுத்தம், பதட்டம் குறைக்கும் – நறுமண சிகிச்சையில் (அரோமாதெரபி) புதினா மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் மூலிகையாகும். இதன் வலுவான, புத்துணர்ச்சியூட்டும் வாசனை மன அழுத்தத்தைக் குறைத்து உடலையும் மனதையும் புதுப்பிக்கிறது.  புதினாவின் அப்போப்டொஜெனிக் செயல்பாடு இரத்தத்தில் உள்ள கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

கார்ட்டிசால் (cortisol) என்பது அட்ரினல் சுரப்பியால் சுரக்கப்படும் ஒரு ஸ்டீராய்டு இயக்குநீர் ஆகும். இது ஒரு குளுக்கோகார்டிகாய்டு ஆகும். இது மனிதஉடலின் உட்சூழல் (internal environment) உளைச்சலுக்கு உள்ளாகும் போது சுரக்கப்படுகிறது.

* சரும ஆரோக்கியம் – அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பண்புகளை புதினா  கொண்டுள்ளது, இது சருமத்தில் ஏற்படும் முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இலைகளில் காணப்படும் சாலிசிலிக் அமிலம் உள்ளது, முகப்பரு எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.  புதினா ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளதால் உடலில் இருந்து ஃப்ரீ-ரேடிக்கல்களை அகற்றி இளமையான சருமத்தைப் பெற உதவுகிறது. மேலும், சருமத்தில் உள்ள ஈரப்பதத்தையும் தக்க வைத்துக் கொள்கிறது,

* வாய்வழி பராமரிப்பு – புதினா இலைகள் வாய் சுகாதாரத்துக்கு முக்கியமானதாகும். புதினாவில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் சுவாச புத்துணர்ச்சிக்கு  உதவும்.

* ஞாபகசக்தி அதிகரிக்கிறது –  நினைவகத்தை மேம்படுத்தி மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை மீட்டெடுக்க புதினா உதுவுவதாக ஆராய்ச்சி தரவுகள் தெரிவிக்கின்றன.

From curing headache to promoting weight loss: Know about the many benefits of pudina or mint

* உடல் எடையை குறைக்கிறது – புதினாவின் அத்தியாவசிய எண்ணெய்யில் உள்ள செரிமான நொதிகளை பித்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதோடு செரிமானத்தை வேகப்படுத்துகிறது. இது உணவில் உள்ள சிறந்த மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு உதவுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Benefits of pudina or mint cures headache stress and depression weight loss

Next Story
சித்ரா எனக்கு இன்ஸ்பிரேஷன்… அதே ஆதரவை கொடுங்க! பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை உருக்கம்Pandian Stores New Mullai Kavya shares about VJ Chithra Instagram post Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com