பசலைக்கீரையில் நிறைய வகைகள் உள்ளன. இதில் கொடிப் பசலைக்கீரை மிகவும் நல்லது. இந்தக் கீரையை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக, வாரத்திற்கு ஒரு முறை இதனை சாப்பிடலாம்.
இதனால் பிற்காலத்தில் ஏற்படும் கண் பார்வை தொடர்பான பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். இதில் வைட்டமின் ஏ, இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது. இது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். தலை முடி உதிர்வையும் இது சரி செய்கிறது.
இதில் இருக்கக் கூடிய அன்டி ஆக்சிடென்ட்ஸ் புற்றுநோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோயை இது தடுக்கிறது.
செரிமான பிரச்சனைகளுக்கு பசலைக்கீரை மருந்தாக செயல்படுகிறது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்கிறது. மேலும், மாரடைப்பு ஏற்படுவதையும் இது தடுக்கிறது.
அனைத்து வகையான எலும்பு வலிகளுக்கும் பசலைக்கீரை மருந்தாக அமையும். இதில் இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ் இரண்டும் வலியை குறைக்கும்.
சிறுநீர் தொற்று இருப்பவர்களுக்கு பசலைக்கீரையை கொடுக்கலாம். 5 நாள்களுக்கு இதனை சாப்பிட்டால் பிரச்சனைகள் குணமடைந்து விடும் எனக் கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“