மதியம் உணவில் இருக்க வேண்டியவை.. தவிர்க்க வேண்டியவை..

ரசத்தை போல தான் தயிரும். தினமும் சிறிதளவு தயிர் சாதம் சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெருகும்.

By: Updated: June 30, 2018, 04:09:57 PM

சூரியன் உச்சிக்கு வரும் வேளையில் தான் அக்னியும் உச்சத்தில் இருக்கும். ஆம்! நமது செரிமான சக்திக்கும் சூரியனுக்கும் ஒரு நெருங்கிய சம்மந்தம் உண்டு. அதனால் தான் மழைக்காலங்களில் நமக்கு பசி எடுக்காத உணர்வு மேலோங்கி இருக்கும்.
உலகில் பல நாட்டினர் உணவு, ஓய்வு, தூக்கம் ஆகிய மூன்று விஷயங்களில் எவ்வளவு விலை கொடுத்தாலும் சமரசம் செய்து கொள்வதில்லை.

அவரவர் உணவுப் பழக்கத்திற்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப மதிய உணவிற்கு அப்படியொரு மரியாதையை  செய்கின்றனர்.   உண்பதற்கு போதுமான நேரத்தை ஒதுக்கி, விரும்பிய உணவுகளை ரசித்து உண்கின்றனர்.  மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.

சரி உங்கள் மதிய உணவில்  என்ன இருக்க வேண்டும் என்று பார்ப்போமா?

1.`வெரைட்டி ரைஸ்’ என்று நாம் செய்யும் புளியோதரையோ, எலுமிச்சை சாதமோ, தக்காளி சாதம் ஆகியவை வாரத்தில் ஒருநாள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இவற்றில் சிறிது பூண்டு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய் ஆகியவை சேர்த்தால் மிகவும் நல்லது.

2. பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்ற நீர்ச்சத்துகள் நிறைந்த காய்கறிகள்.

3. மதிய உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியம். நம் உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கும்.

4. சிக்கன், மீன் போன்றவற்றையும் மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சாப்பிட்டது செரிமானம் ஆக தேவையான நேரம் கிடைக்கும். அசைவ உணவுகளான மீன் வறுவல், பிரியாணி போன்றவற்றைச சாப்பிட மதிய நேரமே ஏற்றது.

5. மதிய உணவில் அவசியம் இடம்பெறவேண்டிய ஒன்று, ரசம். இது, செரிமானம் சீராக நடைபெற உதவும். ரசத்தை போல தான் தயிரும். தினமும் சிறிதளவு தயிர் சாதம் சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெருகும்.

6. அனைத்து கீரை வகைகளும் இருத்தல் நல்லது.

இருக்க கூடாதவை:

1. மைதாதாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நாண் போன்றவற்றை மதியம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

2. எண்ணெய்யில் பொரித்த உருளைக்கிழங்கு போன்றவற்றை மதியம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

3. பஜ்ஜி, பானிபூரி, பிட்சா, சமோசா போன்றவற்றையும் மதிய உணவில் எடுத்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Best lunch list veg and non veg

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X