Best tourist places to visit in Coimbatore : கோவையின் சுற்றுலாத் தளங்கள் பெரும்பாலும் மக்களுக்கு அறிமுகம் இல்லாதவையாக இருக்கின்றன. கோயம்புத்தூருக்கு சுற்றுலா வருபவர்கள் இங்குள்ள 26 இடங்களுக்கும் சென்றாலே கோவையின் சுற்றுலா நிறைவு பெறும். கோவையில் மக்களை கவரும் சுற்றுலா தளங்கள் என்ன இருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
மருதமலை மலைக் கோவில்
கோயம்புத்தூர் நகரிலிருந்து சுமார் 15 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த மருதமலை மலைக் கோவில். இந்தக் கோவிலுக்கு மக்கள் விடுமுறை தினங்களில் அதிக அளவில் வருகை தருகின்றனர். இந்த கோவில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். இங்கு வருகை தரும் பக்தர்கள் இந்த கோவிலில் உள்ள முருகப் பெருமானை தரிசித்து செல்கின்றனர். மலை அடி வாரத்திலிருந்து மேல் இரண்டு முதல் மூன்று பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பக்கதர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் இது மாறுபடும். இங்கு மூலிகைகள் பல இருப்பதாக நம்பப் படுகிறது.
மேலும் படிக்க : சுற்றுலா வாசிகளை அழைக்கும் புகழ்பெற்ற சீர்காழி
வைதேகி நீர்வீழ்ச்சி
இந்த நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கு சிறப்பு அனுமதி வேண்டும் என்று கூறப்படுகிறது. வைதேகி நீர் வீழ்ச்சி இங்குள்ள அருவிகளில் முக்கியமானதாகும். இது கோயம்புத்தூர் நகரில் இருந்து கிட்டத் தட்ட 35 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு கோடைக் காலங்களில் அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.
சிறுவாணி நீர்வீழ்ச்சி
சிறுவாணி தண்ணீர் இனிக்கும் என்ற வாக்கில் இருந்து இந்த நீர் வீழ்ச்சியின் தண்ணீரின் சுவையை பற்றி அறியலாம். இது கோவை நகரத்திலிருந்து கிட்டத் தட்ட 37 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
அய்யப்பன் கோவில்
கோவை நகரத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த அய்யப்பன் கோவில். இங்கு முருகன், விநாயகர், மகா விஷ்ணு, துர்கா உள்ளிட்ட கடவுளர்களும் இங்கே வீற்றியிருக்கின்றனர். இது கேரளாவில் இருக்கும் சபரி மலைக்கு நிகரான கோவில் என்று பக்தர்களால் நம்பப் படுகிறது. சபரி மலை அய்யப்பன் கோவிலில் கடை பிடிக்கப்படும் அனைத்து சம்பிரதாயங்களும் இங்கும் உண்டு.
அனுபவி சுப்பிரமணியர் கோவில்
இந்த கோவிலுக்கு உள்ளூர் மக்கள் பெரும்பாலும் வருகை தருகின்றனர். விவரம் அறிந்த சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது கோவை நகரிலிருந்து 27 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.இங்குதான் அனுபவி சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது.