Advertisment

”அழகென்றால் இவள் தானா” பிக் பாஸ் ஜூலியை இப்படி பார்த்து இருக்கீங்களா?

ஜூலியை கலாய்த்தவர்கள் வாய் அடைத்து போயியுள்ளனர். அதுமட்டுமில்லை இன்ஸ்டாவில் ஜூலியின் ஃபோட்டோ ஷூட் தான் வைரல்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bigg boss julie instagram maria juliana

bigg boss julie instagram maria juliana

bigg boss julie instagram maria juliana : ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சியாக கொண்டாடப்பட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே ”யாருடா இந்த பொண்னு” னு கேட்க வைத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் குறிப்பாக ஓவியாவுக்கு எதிராக அவர் பேசியவை, ஜூலியின் நன்மதிப்பைக் குறைத்துவிட்டது.

Advertisment

செவிலியராக இருந்தாலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பதுதான் ஜூலியின் ஆசை. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கூட அதை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல், ‘பிக் பாஸ்’ முடிந்தபிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் ஜூலி. அதன் பின்பு அவரை தேடி வந்த வாய்ப்பு தான் அம்மன் தாயி.

இந்த படத்தில் ஜூலி அம்மனாக நடித்துள்ளார். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் அம்மன் தாயில் ரிலீஸூக்காக வெயிட்டிங். இதற்கிடையில் ஜூலி கல்லூரி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், கடை திறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.

publive-image

publive-image

இதை தவிர்த்து லாக்டவுனில் வீட்டில் இருக்கும் ஜூலி அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் செய்து படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாவில் அக்கவுண்ட் பண்ண ஜூலி ரொம்ப பிஸி. இந்நிலையில் தான் பிரைடல் ஃபோட்டோ ஷூட் செய்த ஜூலியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன,

publive-image

publive-image

இவ்வளவு அழகான ஜூலியை பார்க்கவே சூப்பராக இருக்கு என்கிறார்கள் ஜூலி வெறியர்கள்.

விஜய் டிவியின் ஆல் டைம் ஃபேவரெட் டிடி… லாக்டவுனில் செய்யும் வேலை இதுதான்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment