Bigg Boss Mamathi Chaari Fitness Secrets Tamil News : ஆர்ஜெ, விஜெ, நடிகை, தொழிலதிபர் என பன்முகம் கொண்ட மமதி சாரியை தெரியாத 90;ஸ் கிட்ஸ்களே இருக்க முடியாது. அப்போது பார்த்தது போலவே தோற்றம் கொண்டிருக்கும் இவருடைய ஃபிட்னெஸ் ரகசியங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
Advertisment
"காலையில் எழுந்ததும் செய்யவேண்டிய உடற்பயிற்சி ஒன்று இருக்கிறது, அத்தைதான் முதலில் நான் தினமும் எழுந்ததும் செய்வேன். பிறகு சூடாக ஒரு பிளாக் காபி. பிறகு, வேகவைத்த ஒரு முழு முட்டை மற்றும் 3 முட்டைகளின் வெள்ளைக் கரு சாப்பிடுவேன். அதனைத் தொடர்ந்து, வெந்நீரில் ஒரு 20 நிமிடங்கள் கால்களை வைத்துக்கொள்வேன். பிறகு குளித்து ரெஃப்ரெஷ் ஆகிடுவேன்.
பிறகு ஜிம், அரை கிலோ மீன், கொஞ்சம் காய்கறி வேகவைத்து சாப்பிடுவேன். இதுதான் லன்ச். பிறகு மாலை வேளையில் ரன்னிங். பிறகு கொஞ்சம் மட்டன் மற்றும் காய்கறிகள் சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து தூங்கிவிடுவேன். இதுதான் என்னுடைய ரொட்டின்.
அழகு குறிப்புக்கள் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு சருமத்திற்கும் மாறுபடும். சுத்தமான வெள்ளை துணியில் ஐஸ் கட்டி வைத்து, முகத்திற்கு மசாஜ் கொடுக்கவேண்டும். இப்படிச் செய்வதனால், முகத்தில் எந்தவிதமான போர்ஸ்களும் இருக்காது. சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
அதேபோல தலைமுடியை ஒரு நாளுக்கு 4 முறையாவது சீவவேண்டும். இப்படிச் செய்வதனால், தலையில் ரத்த ஓட்டம் சீராக மாறும். அதனால் தலைமுடி வலுப்பெறும். மற்றபடி நாம் நாமாக இருந்தால் நிச்சயம் சந்தோஷம் உறுதி. அதனால், உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் உறுதி. எப்போதும் இளமையாக இருக்க இதைச் செய்தாலே போதும்".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil