கசப்பு நிறைந்த பாகற்காய் கொடியில் காய்க்கும் காய்வகையான சுரைக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. இது முலாம்பழம், பூசனிக்காய், வெள்ளரிக்காய் வகைகளின் குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு காய் வகை. கசப்பு மிக்க உணவுப் பொருளான பாகற்காயில் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரக்கூடிய அவ்வளவு இனிமையான சத்துகள் நிரம்பியுள்ளது.
பாகற்காயில் உள்ள சி வைட்டமின் ரசாயன சேர்மங்களை உருவாக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது நோய் தடுப்பு, எலும்பு சிதைவு மற்றும் காயத்தை குணப்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபடும் ஒரு முக்கியமான மைக்ரோ ஊட்டச்சத்து ஆகும். பாகற்காயில் ஏ வைட்டமினும் அதிக அளவில் உள்ளது. இது கொழுப்பை கரைக்கக்கூடிய வைட்டமின் ஆகும். இது சருமா ஆரோக்கியத்தையும் சீரான பார்வைத் திறனையும் மேம்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல், பாகற்காய், ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலத்தை (வைட்டமின் பி9) அளிக்கிறது. அது உயிரணு வளர்ச்சி மற்றும் டி.என்.ஏ.உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இளம் நீரிழிவு நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும்
பாகற்காய் ஆண்ட்டி ஆக்ஸிடன்களை பெரிய அளவில் கொண்டுள்ளது. இது உங்கள் உயிரணுக்களின் சேதத்திற்கு எதிராக செயல்பட்டு புற்றுநோயின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. அதே போல, பாகற்காய் அதிக அளவில் நார்ச்சத்துக்களின் மூலமாக விளங்குகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைக் குறைக்கிறது. மேலும், குடலின் செயல்திறனை அதிகரிக்கிறது. அதோடு, இளம் வயதிலேயே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில், இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் பருமனான குழந்தைகளுக்கு இது நன்மை பயக்கும். ஏனெனில், இது எடை குறைப்புக்கும் உதவுகிறது.
பாகற்காய் கசப்பாக இருக்கிறது என்று உங்கள் பிள்ளைகள் சாப்பிட மறுத்து அடம்பிடிக்கிறார்களா? கசப்பான பாகற்காயை உங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த, நீங்கள் பாகற்காயை நன்றாக வறுத்து மசாலாப் பொருட்களுடன் கலந்து சிற்றுண்டிகளாகவும் பரிமாறலாம். தயிர், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சேர்த்து நன்றாக வறுத்தும் தயாரிக்கலாம். இது அதன் கசப்பு சுவையை எடுத்துக்கொண்டு புளிப்பு சுவையை கொடுக்கும். கசப்பான பாகற்காய் உடன் ஒரு வழக்கமான தயாரிப்புக்காக வெண்டைக்காய் அல்லது உருளைக்கிழங்குடன் சேர்க்கலாம்.
உங்கள் பிள்ளைகளை பாகற்காயின் கசப்பான சுவைக்கு பழக்கப்படுத்தி வளர்த்துவிட்டால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாகற்காயில் மசாலாப் பொருட்களைச் சேர்த்து சைட் டிஷ்ஷாகவும் வறுவலகாகவும் பரிமாறலாம.
உங்கள் பிள்ளைகள் திட உணவுகளை சாப்பிட ஆரம்பித்தவுடன் கசப்பான பாகற்காயை சாப்பிட அறிமுகப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் சிறிய அளவில் கொடுக்கத் தொடங்கி படிப்படியாக அவர்களின் வயதுக்கு ஏற்ப அதிகரித்து கொடுங்கள்.
பாகற்காயில் மேலே குறிப்பிட்ட நன்மைகளைத் தவிர, மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை போன்ற சுவாசப் பிரச்சினைகளுக்கு கசப்பான பாகற்காய் சிறந்தது. உங்கள் குழந்தைக்கு பாகற்காயை சாறாகவும் கொடுக்கலாம், ஆரோக்கியத்தை மேம்படுத்த தண்ணீரில் கலந்து தேன் சேர்த்தும் கொடுக்கலாம். கசப்பான பாகற்காய் நன்றகாக உறங்குவதற்கு மிகவும் ஏற்றது. ஏனெனில் இது ஒரு அமைதியான விளைவை அளித்து தூக்கத்திற்கு உதவுகிறது.
முதலில் உங்கள் குழந்தைகளுக்கு கசப்பு ஒவ்வாமை இருக்கிறதா என்று சோதித்துக்கொள்ளுங்கள்
கசப்பான பாகற்காய் குழந்தைகளுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அதை அதிக அளவில் கொடுக்கக்கூடாது. கசப்பான பாகற்காய் குழந்தைகளில் சகிப்புத்தன்மையை ஏற்படுத்தக்கூடும். மிக முக்கியமாக, உங்கள் பிள்ளைக்கு கசப்பான பாகற்காய் மீது ஒவ்வாமை இருக்கிறதா என்று சோதிக்க வேண்டியது அவசியம். முக சிவத்தல், அதிகப்படியான உமிழ்நீர் மற்றும் வயிற்று வலி, மங்கலான பார்வை, வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் தசை பலவீனம் போன்ற அறிகுறிகள் உள்ளதா என்று பாருங்கள். கசப்பான பாகற்காயை உங்கள் குழந்தைக்கு அறிமுகப்படுத்திய பின் இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கவனித்தால், உட்கொள்வதை நிறுத்தி, விரைவில் ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
பாகற்காய் ரெசிப்பிகள்
இங்கே சில கசப்பான அல்லது சுவை மிக்க பாகற்காய் சமையல் வகைகள் செய்முறையை அளிக்கிறோம். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
குஜராத்தி பாகற்காய்
தேவையான பொருட்கள்:
3-4 நடுத்தரமான பாகற்காய், 1 நடுத்தர அளவு வெங்காயம்,
2-3 டீஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு உப்பு, 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 3-4 தேக்கரண்டி கொத்தமல்லி மற்றும் சீரக தூள், 1/4 தேக்கரண்டி கரம் மசாலா, 2 டீஸ்பூன் வெல்லம் அல்லது சர்க்கரை, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.
செய்முறை:
முதலில் பாகற்காயின் தோலை சீவி நல்ல தண்ணீரில் அவற்றைக் கழுவிக்கொள்ளுங்கள். வெங்காயத்துடன் சேர்த்து அவற்றை நறுக்கி வைத்துக்கொளுங்கள். பாகற்காயில் உள்ள விதைகளை எடுத்துவிடுங்கள்.
ஒரு கனமான வானலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, வெங்காயத்தை போட்டு 4-5 நிமிடங்கள் அல்லது வெளிர் பழுப்பாக ஆகும் வரை வதக்கவும். இப்போது பாகற்காயை சேர்த்து நன்கு கலக்கவும்.
தயாராக உள்ள அனைத்து மசாலாவையும் மற்றும் தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும். நன்றாகக் கிளறி கடாயை ஒரு மூடியால் மூடி வைக்கவும். குறைந்த வெப்பத்தில் சுமார் 10-12 நிமிடங்கள் வேக வையுங்கள்.
இடையிடையே, வானலைத் திறந்து, காய் அடிப்பிடிக்காத அளவுக்கு கிளறிவிடுங்கள்.
பாகற்காய் வெந்ததும் வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளுங்கள்.
நன்றாக கலந்தபின் 2-3 நிமிடங்கள் மேலும் வேக வையுங்கள். இப்போது ரொட்டி அல்லது பரோட்டாவுடன் சேர்த்து பரிமாறுங்கள் அவ்வளவுதான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.