Rice cooking in tamil: தென்னிந்திய சமையலில் "சாதம்" முக்கிய இடம் பிடிக்கிறது. வளர்ந்து வரும் மாடர்ன் உணவு கலாச்சாரத்தில் சாதம் தயார் செய்ய நம்மில் பலர் குக்கர் நோக்கி நகர்ந்து வருகிறோம். குக்கர் பேச்சிலர்களுக்கும், சாதம் தயார் செய்ய தெரியாதவர்களுக்கும் கிடைத்த வரமாக இருந்தாலும், அதில் சாதம் ரெடி செய்ய சிலர் சிரமப்படுகிறார்கள். பலர் அவற்றுக்கு எத்தனை விசில் வைப்பது என்பது கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
இந்த பிரச்சனைகளுக்கு மிகச் சரியான தீர்வையும், உதிரியான சாதம் சிம்பிள் செய்முறையில் தயார் செய்யவும் இங்கு எளிய குறிப்புகளை வழங்கியுள்ளோம்.
வடி சாதம் சிம்பிள் செய்யமுறை
குக்கரில் சாதம் தயார் செய்ய நீங்கள் எந்தவித அரிசியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அரிசியை சமைப்பதற்கு முன் அதாவது வேக வைப்பதற்கு முன் அவற்றை நன்கு ஊற வைத்துகொள்ளவும். (அரிசிக்கேற்ப அவற்றை அரை மணி நேரம் சுடுதண்ணீரில் ஊற வைக்கலாம்)
அரிசிக்கு குக்கரில் சரியான பதத்தில் வேக மிக முக்கியமானது தண்ணீர் அளவு. 1 டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் அளவு தண்ணீர் வைக்க வேண்டும். புதிய அரிசி என்றால் 2 1/2 டம்ளர் தண்ணீர் வைத்தால் போதுமானது. எந்த டம்ளரில் அரிசியை அளந்தீர்களோ அதே டம்ளரில்தான் தண்ணீர் வைக்க வேண்டும். குக்கரில் தண்ணீர் ஊற்றியதும் அதில் உப்பு சேர்த்து கொள்ளவும். பின் ரப்பர், பிரஷர் குக்கர் மூடி போட்டு மூடிவிட வேண்டும்.
இப்போது சாதத்தை 5 விசில் அளவு வரும் வரை வேக வைக்கவும். பிறகு திறந்து பார்த்தால் சாதம் தயராக இருக்கும். அவற்றை சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கொதிக்க வைத்து வடித்துக்கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி வைக்கவும். நீங்கள் எதிர்பாத்த உதிரியான வடிசாதம் தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்தமான சைடிஷ்களுடன் பரிமாறி ருசித்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.