Bonda Recipe in Tamil: வீட்டில் உள்ள மக்களுக்கு மாலை நேரத்தில் எந்த வகையான ஸ்நாக்ஸ் தயார் செய்வது என்று தெரியாமல் சில நேரத்தில் குழப்பம் அடையலாம். அந்த கவலையை போக்கவே இந்த இன்ஸ்டா போண்டா ரெசிபி. ரொம்பே டேஸ்டியாக இருக்கும் இந்த கடலை மாவு போண்டா மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். எந்த வித சட்னி இல்லாமலே சுவைக்கலாம்.
Advertisment
இன்ஸ்டா போண்டா ரெசி தயார் செய்யத் தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 300 கிராம், பெரிய வெங்காயம் – 3, ஆப்ப சோடா – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப.
Advertisment
Advertisement
இன்ஸ்டா போண்டா ரெசி சிம்பிள் செய்முறை :
முதலில் கொத்தமல்லி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு, ஒரு பாத்திரத்தில் கடலை மாவை சேர்த்து அதனுடன் ஆப்ப சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் அவற்றுடன் முன்னதாக நறுக்கிய கொத்தமல்லி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும்.
தொடர்ந்து ஒரு குழி கரண்டி அளவிற்கு எண்ணெய் எடுத்து சூடேற்றி கொள்ளவும். இந்த சூடான எண்ணெயை சேர்த்து மாவு பிசைந்து கொள்ளவும். இது கடலை மாவு போண்டா மொறுமொறுவென வர உதவும்.
இதன்பிறகு, அந்த மாவுடன் தேவையான அளவிற்கு தண்ணீரை தெளித்து தெளித்து போண்டா மாவு பிசையவும். போண்டா மாவு கெட்டியான பதத்துக்கு வரும் வரை மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கொள்ளவும்.
பிறகு நீங்கள் கலந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்க நன்கு வேக வைத்து எடுக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த மொறுமொறு கடலை மாவு போண்டா தயாராக இருக்கும். மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து போண்டா சுடுவது மொறுமொறு போண்டா கிடைக்க உதவும். அதோடு சாப்பிடும்போது நல்ல ருசியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“