இட்லி மாவு இருக்கிறதா? குட்டீஸ்களுக்கு இந்த ஸ்னாக்ஸ் செய்து கொடுங்க!

bonda seivathu eppadi tamil: தின்னத் தின்னத் திகட்டாத இட்லி மாவில் செய்த போண்டா எப்படி செய்யலாம் என இங்கு பார்க்கலாம்.

bonda Recipes in tamil: idli batter bonda making in tamil

bonda Recipes in tamil: பருவ மழை தொடங்கியுள்ள இந்த நேரத்தில் சூடாக எதாவது சாப்பிட வேண்டும் என நம்மில் பலர் நினைப்பதுண்டு. குறிப்பாக வீட்டில் இருக்கும் குழந்தைகள். இவர்களுக்கு நமக்கு தெரிந்ததையே அடிக்கடி செய்து கொடுத்து போர் அடிக்கும். எனவே தான் உங்களுக்காக ஈஸியான ஒரு ரெசிபியை பகிர்ந்துள்ளோம்.

இந்த அற்புதமான ரெசிபியை தயார் செய்ய உங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது. வெறும் 10 நிமிடங்கள் போதும். அப்படி என்ன ரெசிபி என்றால், தின்னத் தின்னத் திகட்டாத இட்லி மாவில் செய்த போண்டா தான் அது. இவை தாயார் செய்ய உங்களிடம் அரை கப் இட்லி மாவு இருந்தால் போதும். அவற்றில் அட்டகாசமான போண்டா செய்து அசத்தலாம்.

சரி., இப்போது தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை இங்கு பார்க்கலாம் வாங்க!

இட்லி மாவில் போண்டா செய்யத்தேவையான பொருட்கள்:-

இட்லி மாவு – அரை கப்
கோதுமை மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
தேங்காய் – அரை மூடி
வர மிளகாய் – மூன்று
பூண்டுப் பல் – ஆறு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு

‘இட்லி மாவு போண்டா’ செய்யும் முறை:-

இட்லி மாவில் போண்டா தாயார் செய்ய முதலில் தேங்காய் அரை மூடி அளவிற்கு துருவி, அவற்றுடன் வர மிளகாய், உரித்த பூண்டு பற்கள், கொஞ்சம் கருவேப்பிலை, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் இட்டு நொறுநொறுவேன்று லேசாக தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.

பிறகு நொறுநொறுப்பாக அரைத்துள்ள இவற்றை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.

இதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் அரை கப் அளவிற்கு இட்லி மாவு சேர்த்து அவற்றுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, மிளகாய்த் தூள் அரை டீஸ்பூன், கரம் மசாலாத் தூள் அரை டீஸ்பூன், மிளகுத் தூள் அரை டீஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

நாம் இட்லி மாவில் ஏற்கனவே உப்பு சேர்த்துள்ளதால் இவற்றுடன் உப்பு சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

இப்போது, ஒரு கடாய் எடுத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். அவை நன்கு காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளையும் எடுத்து கலந்து வைத்துள்ள இட்லி மாவில் முக்கி கரண்டியால் எடுத்து எண்ணெயில் இட்டு பொரிக்கவும்.

மாவு எல்லா பக்கமும் பொன்னிறமாக பொரிந்ததும் அவற்றை எடுத்து ருசித்து மகிழவும்.

மிகவும் வித்தியாசமான மற்றும் சுவையான இந்த போண்டாவை நீங்களும் ஒரு முறை முயற்சியுங்க மக்களே!!!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bonda recipes in tamil idli batter bonda making in tamil

Next Story
அட்டகாசமான 5 பயன்கள்… சிம்பிளா கருவேப்பிலை டீ இப்படி செய்து பாருங்க!curry leaves benefits in tamil: curry leaf tea making in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com