இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று ரத்தக்கொதிப்பு, இந்த பாதிப்பு உடலில் இருக்கிறது என்று உறுதியானால் உணவில் கட்டப்பாடுகள் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
அந்த வகையில் ரத்தக்கொதிப்பு பாதிப்பு இருப்பவர்கள் உணவு மட்டுமின்றி கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஒன்றை பற்றியும் ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
ரத்த கொதிப்பு பாதிப்பு இருந்தால் உப்பு ஆகவே ஆகாது. உடலில் ரத்த கொதிப்பு அதிகம் இருக்கிறது என்று தெரிந்தாலே உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். உப்பு அதிகம் சேர்த்த உணவுகள், உப்பு கலந்த மோர் சாப்பிடுவது, உப்பு தூவிய உருளைக்கிழங்கு சாப்பிடுவது இவற்றை தவிர்க்க வேண்டும்.
ரத்தக்கொதிப்பு குணமாக உணவு முறைகள் | Dr.Sivaraman speech on blood pressure treatment
உடலில் ரத்த கொழுப்பு அதிகமாக இருந்தால் அதற்கு ஏற்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக புலால் உணவு ஆட்டு இறைச்சி எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் தினமும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். குறிப்பாக காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் வரை தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல ரத்த கொதிப்பு உள்ளவர்கள் பயணம் மேற்கொள்ளும் போது உறங்கிக்கொண்டு போகும் மாதிரியான பயணத்தை தேர்வு செய்வது தான் நல்லது. குளிர் காலத்தில் இரவில் பஸ்,ரயில் ஜன்னல் ஓரம் உட்கார கூடாது.
அப்படி அமர்ந்து செல்வதால் அந்த குளிர் காற்றுக்கு முக வாதம் வரும். அதாவது, கண், உதடு, கன்னம் பிளவு பிதுங்கல் போன்ற பிரச்சனைகள் வரும் என்கிறார் மருத்துவர் சிவராமன்.
அதேமாதிரி குளிர்ந்த தண்ணீர், கூடிரிங்ஸ் குடிக்க கூடாது. இதையெல்லாம் தவிர்க்க வேண்டும். மேலும் எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.