Brahma 2018 Science Festival : தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய அறிவியல் கண்காட்சி மற்றும் விழாவாக அறியப்பட்டுவருகிறது பிரம்மா அறிவியல் விழா. மூன்றாவது பிரம்மா அறிவியல் நிகழ்ச்சியானது ஆகஸ்ட் மாதம் 3 மற்றும் 4 தேதிகளில் நடைபெற்றது.
Brahma 2018 Science Festival : பிரம்மாண்டமாக நடைபெற்ற பிரம்மா 2018
தேசிய ஸ்டெம் கல்வி நிறுவனம், பாரதிய வித்யா பவன், ஐஐடி சென்னை, க்ரியோகிட்ஸ் மற்றும் சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் நோக்கமே தலைசிறந்த அறிவாளிகளை குழந்தைகளிடமிருந்து அடையாளம் காண்பது தான்.
க்யூரியோ கிட்ஸ் நிறுவனம் பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்:
இந்த விழாவிற்கு தலைமை வகித்தவர் பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகள் பெற்ற டாக்டர். டி.ராமசாமி. அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு இவர் தான் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/08/IG7A8643-1024x683.jpg)
இந்நிகழ்வில் பாரதிய வித்யா பவனில் இருந்து கே.என். ராமசாமி, எஸ்.எஸ். ராஜசேகர் ஆகியோரும், பாவனாஸ் ராஜாஜி பள்ளி பிரின்சிபல் பி.ஜி.சுப்ரமணியன் போன்றோரும் கலந்து கொண்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/08/IG7A8591.jpg)
செட்டிநாடு ஹரிஸ்ரீ வித்யாலயம், வேலம்மாள் வித்யாலயா, எம்.வி.எம் பள்ளி, பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, பாவன்ஸ் ராஜாஜி வித்யஷ்ரம், என்.பி.எஸ் சர்வதேசப்பள்ளி - பெரும்பாக்கம், மஹரிசி வித்யா மந்திர், அசோக் லேலாண்ட் பள்ளி - ஆகிய பள்ளிகளில் இருந்து வந்த குழந்தைகள் இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/08/IG7A8330-1024x683.jpg)
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து சுமார் 125க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் 6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆவார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2018/08/IG7A8614-1024x683.jpg)
இப்போட்டி மற்றும் இந்நிகழ்வினை பார்க்க 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வந்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்ய ஐஐடி மும்பை, மெட்ராஸ் பல்கலைக்கழகம், மற்றும் எஸ்.எஸ்.என் போன்ற கல்வி நிறுவனங்களில் இருந்து 25 பேராசிரியர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களும் பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.