Bread recipes in tamil, bread recipes video : நம் பலருக்கும் பிரெட் என்றால் அலாதி பிரியம். ஆனால் அதில் அதிகமான கலோரி இருக்கிறது. சப்பாத்திக்கு பிறகு நம்மில் பல பேர் விரும்பி சாப்பிடும் உணவு பிரெட். இந்த பிரட்டில் பலவிதமான உணவுகளும் சமைத்து சாப்பிடலாம். பிரெட் பட்டர் மசாலா, மற்றும் டீ ஒரு நல்ல மாலை உணவாக அமைகிறது. மேலும் பிரட் ஆம்லெட், பிரட் உப்புமா பிரெட் அல்வா, என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்
Advertisment
அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது, உங்கள் சுவையை தூண்டும் மசாலா பிரட் கட்லட் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பிரட் கட்லட் ரெசிபியை சமைத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்: bread recipes in tamil
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், அரிசி மாவு, கோதுமை மாவு,தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி
Advertisment
Advertisements
bread recipes video : செய்முறை
பிரட் எடுத்து, தண்ணீரில் நனைத்து, நன்றாக பிழிந்து ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பொடியாக வெட்டி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தனி மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.
அரிசி மாவு, கோதுமை மாவு, சேர்த்துக் கொண்டு தேவையான அளவு உப்பு போட்டு, கொத்தமல்லி தழை தூவி, தண்ணீர் ஊற்ற வேண்டாம். அப்படியே நன்றாக பிசைந்து இந்த மாவை ஐந்து நிமிடங்கள் அப்படியே ஊற வைத்துவிடுங்கள்.