singer sathya prakash instagram : சூப்பர் சிங்கர் குடும்பத்தில் இருந்த வந்த பலரும் இப்போது இசை உலகில் ஜொலித்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் சத்ய பிரகாஷ் கோலிவுட்டில் மிகச் சிறந்த பாடகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன், நல்லை அல்லை, பிழைப்பேனா என இளைஞர்களின் ஃபேவரெட் சாங்ஸ் அனைத்தும் நம்ம சத்ய பிரகாஷ் குரலில் ஒலித்தவை தான்.
திருமணம்.. 2 குழந்தைக்கு அம்மா… நம்ப முடியாத வெயிட் லாஸ்! ஆச்சரியப்பட வைக்கும் ராதிகா மகள் ரேயான்
இதுவரை பாடகராக இருந்த சத்யா, இப்போது ஒரு இசை ஆல்பம் மூலம் இசையமைப்பாளராகவும் களம் இறங்கி இருக்கிறார் வாழ்த்துக்கள். பள்ளிப் பருவத்தை எல்லாம் கோயம்புத்தூரில் முடித்த சத்யா, கல்லுரி படிக்கும் போதே தன்னுடைய இசைப் பயணத்தை தொடங்கினார். கர்நாடக இசை இவருக்கு அத்துப்பிடி.
2011 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கரின் மூன்றாவது சீசனில் தனது அனைத்து திறமையும் வெளிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு பின்பு சினிமாவில் பாட வாய்ப்பு அவருக்கு தேடி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் வந்த 3 படத்தில் அனிருத் பாடிய ‘போ நீ போ’ என்ற பாடலை சத்ய பிரகாஷ் ரீமிக்ஸ் செய்து உள்ளார். அது மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பாடி வருகிறார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு சத்ய பிரகாஷ், பார்கவியை திருமணம் செய்து கொண்டார். பார்கவியும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர். சத்ய பிரகாஷ் சமீபத்தில் தனது செல்ல பையனுடன் பதிவிட்டிருந்த செல்பி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil