Advertisment

மார்பக தளர்வு பயம்… பெண்கள் Bra அணிவது அவசிய தேவையா?

இளமை எப்படி இயற்கையானதோ அதே போல, முதுமையும் இயற்கையானதே. பெண்கள் பலரும் மார்பகம் தளர்வாக இருப்பது பற்றி கவலை கொள்கிறார்கள். இதனால், பெண்கள் பிரா அணிவது அவசியமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
wearing a bra, not wearing a bra, should you wear a bra, is it important to wear a bra, is it necessary to wear a bra, breast health, breast cancer myths, indian express news

கிட்டத்தட்ட அரைநாள் 12 மணிநேரம் அணிந்திருந்த ப்ராவை அவிழ்க்கும்போது ரிலாக்ஸாக உணரவே செய்வார்கள். இது மிகவும் நன்றாக இருக்கும். உண்மையில், ப்ரா அணிவதை முழுவதுமாக நிறுத்தினால் என்ன நடக்கும்? மார்பகங்கள் மாறிவிடுமா? என்றால் இல்லை. ஆனால், நிச்சயமாக சில நன்மைகள் உள்ளன-அதாவது, குறைவான முகப்பரு மற்றும் விலா வலி குறைவு. அதே போல சில தீமைகளும் உள்ளன - முதுகுவலி மற்றும் மாதவிடாய் காலத்தில் அதிக அசௌகரியம் போன்றவையும் உள்ளன. 24 மணி நேரமும் ப்ரா அணிவதற்கு முன்பு அது அவசியம்தானா என்பதை இங்கே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisment
  1. மார்பகங்கள் செழிப்பாக இருக்கும்.

ப்ரா அணியாமல் இருப்பது பற்றிய பொதுவான தவறான கருத்துகளில் ஒன்று, மார்பகங்கள் விரைவாக தளர்வடையும் என்பதுதான்.

மாறாக, மெடிக்கல் நியூஸ் டுடே, சுட்டிக்காட்டியுள்ள 15 ஆண்டு கால பிரெஞ்சு ஆய்வில், பொதுவாகப் பேசினால், ப்ரா அணியாதவர்கள் தினசரி பிரா அணிபவர்களை விட நல்ல மார்பகக் காம்புகள் மற்றும் செழிப்பான மார்பகங்களைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது. மேலும், இந்த ஆராய்ச்சி அவசியம் என்றாலும், பிரான்சின் பெசன்கான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விளையாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளரான ஜீன்-டெனிஸ் ரூய்லன், ஒவ்வொரு நாளும் ப்ரா அணிவதால் மார்பகங்களைத் தாங்கும் தசைகள் பலவீனமடைகின்றன. இதன் விளைவாக மார்பகத் தளர்வு அதிகமாகும் என்று ஆய்வின் தலைவர் கூறினார். ரூய்லன் தனது கண்டுபிடிப்புகள் தொடக்கநிலையில் உள்ளது என்றும், ப்ரா அணிவதைக் கைவிடுவது அனைவருக்கும் ஒரே மாதிரியான விளைவை ஏற்படுத்தாது என்றும் ஒப்புக்கொள்கிறார். ஆனால், 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஆய்வுகள் அவர்களின் மார்பகங்களின் நோக்குநிலையில் எந்த சரிவையும் காட்டவில்லை. ஆனால், அவர்களின் மார்பகங்களின் நோக்குநிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.

50 சதவீதத்திற்கும் அதிகமான முகப்பரு உள்ளவர்களுக்கு முதுகு, தோள்பட்டை மற்றும் மார்பில் பருக்கள் உள்ளன. எனவே, இது மிகவும் பொதுவான பிரச்சினை என்று சிகாகோவில் மருத்துவ மற்றும் தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் கரோலின் ராபின்சன் கூறினார்.

  1. பரு மேம்படும்

“பருக்கள், உங்கள் உடலில் முகத்திலோ அல்லது உடற்பகுதியிலோ (அதாவது, மார்பு, தோள்பட்டை மற்றும் பின்புறம்) எண்ணெய், பாக்டீரியா மற்றும் இறந்த சருமத்தின் கலவையால் துளைகளை அடைப்பதால் ஏற்படுகிறது. முதுகு பருக்கள் சில சமயங்களில் வியர்வையினாலும் மோசமடைகிறது” என்று டாக்டர் ராபின்சன் விளக்குகிறார். ஒரு நாளைக்கு 12 மணிநேரம் ப்ராவை அணிந்துகொண்டு, வியர்த்துக்கொண்டிருந்தால், பரு ஏற்படுகிறது என்றால், ப்ரா அணியாமல் இருப்பது நல்லது. ப்ரா அணியாமல் இருப்பது உடலில் உள்ள பரு பிரச்னையைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

  1. முதுகு வலி ஏற்படலாம்

பிராவின் அளவைப் பொறுத்து, மார்பகங்கள் கனமாக இருக்கும். மார்பகங்களைத் தாங்கிப்பிடிக்கும் ப்ராவின் உதவி இல்லாமல், நீண்ட பயணம் செய்ய முடிவு செய்தால், உங்கள் முதுகு வழக்கத்தை விட அதிகமாக வலிக்கக்கூடும். இந்த காரணத்திற்காக, பெரிய மார்பகங்களைக் கொண்ட சிலர், ப்ராவின் அணிவதற்கான தேவை அதிகமாக இருப்பதைக் காணலாம்.

  1. தோரணை மேம்படும்

80 சதவீத பெண்கள் தவறான ப்ரா அளவை அணிந்துள்ளனர் என்பது ஒரு கட்டுக்கதை என்றாலும், ப்ரா அணிபவர்கள் பலர் சரியான அளவில் அணிவதில்லை. மிகவும் சிறியதாக இருக்கும் ப்ரா மோசமான தோரணை, விலா எலும்பு வலி அல்லது தோள்பட்டை மற்றும் கழுத்து வலி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அப்படியானால், ப்ரா அணிவதை முற்றிலுமாக நிறுத்தினால் - அல்லது சரியான முறையில் பிராவை அணிந்தால் தவறான அளவிலான ப்ராவின் எதிர்மறை விளைவுகள் நீங்கிவிடும்.

  1. மாதவிடாய் காலத்தில் மார்பகங்கள் வலியை ஏற்படுத்தலாம்

மாதவிடாய் காலத்தில் பலர் அனுபவிக்கும் எண்ணற்ற அறிகுறிகளில் ஒன்று மார்பக வலி அல்லது மார்பகம் மென்மை உள்ளது என்ற உணர்வு. இது ஏன் என்றால், மாதவிடாயின் இரண்டாம் பாதியில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்கள் அதிகரிக்கும். ஹெல்த்லைனின் கருத்துப்படி, ஈஸ்ட்ரோஜன் மார்பக குழாய்களை பெரிதாக்குகிறது. அதே நேரத்தில் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தி பால் சுரப்பிகள் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த இரண்டு ஏற்ற இறக்கங்களும் மார்பகங்களை புண்படுத்தும். அப்போது, ப்ரா அணியாமல் இருந்தால், மார்பக வலியை அதிகமாக உணரலாம். ஏனெனில், ஒரு ப்ரா மார்பகங்களை உடலுக்கு அருகில் வைத்து அவற்றின் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது. மார்பகம் தொடர்பான வலியைக் குறைக்கும்.

ப்ரா அண்யாமல் இருப்பது ஆரோக்கியமானதா?

எல்லா நாளும் ப்ரா அணிய விரும்புகிறீர்களா இல்லையா என்பது முற்றிலும் உங்களுடைய விருப்பம். ப்ரா அணிவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டும் அவரவர் மார்பகங்களைப் பொறுத்தது. அதாவது, ப்ரா அவசியம் அணிய வேண்டுமா என்பதற்கு சரியான பதில் இல்லை. சில நாட்களுக்கு ப்ரா அணியாமல் இருக்க முயற்சி செய்து, முதுகு வழக்கத்தை விட அதிகமாக வலிப்பதைக் கவனித்தால், ஒரு மெண்மையான ப்ரா அணிவது சிறந்தது. ப்ரா அணிவதன் மூலம், உங்களை மிகவும் இறுக்கமாக உணராமல் ஆதரவாக இருப்பதாக உணரவைக்கும். நீங்கள் ப்ரா இல்லாமல் ஒரு பறவையைப் போல் சுதந்திரமாகவும், உடல் ரீதியாகவும் நன்றாக உணர்ந்தால், தாராளமாக அப்படியே தொடருங்கள். உங்கள் நம்பகமான ப்ரா அணியாமல் முற்றிலும் நிர்வாணமாக உணர்ந்தால், நாள் முழுவதும் அணியுங்கள். ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது. உங்கள் ப்ராவை தூக்கி எறிவதால் பெரிய மருத்துவச் சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதால், ப்ராவை அணிவதா அல்லது வேண்டாமா என்பது முற்றிலும் உங்களுடைய விருப்பம்தான்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Healthy Life Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment