சப்பாத்திக்கு டேஸ்டியான சைடிஷ்: தயிர் கத்தரிக்காய் கிரேவி சிம்பிள் செய்முறை

thayir kathirikai gravy recipe in tamil: கத்தரிக்காயோடு தயிர் சேர்த்து செய்த கிரேவி சாதம் மற்றும் சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.

brinjal recipes in tamil: simple steps to make curd brinjal gravy in tamil

brinjal recipes in tamil: நம்முடைய ஊர்களில் எளிதில் கிடைக்கும் காய்கறி வகைகளில் கத்தரிக்காயும் ஒன்று. இவற்றில் சுவையான சாம்பார், புளிக்குழம்பு என செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். மேலும், கத்தரிக்காயோடு தயிர் சேர்த்து செய்த கிரேவி சாதம் மற்றும் சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.

இப்பிடி சுவைமிகுந்த சைடிஷ்சை எளிமையான முறையில் எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் – 4

எண்ணெய் – 2 டீ ஸ்பூன்

கடுகு – 1/2 டீ ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

வெங்காயம் – 1

தக்காளி – 2

இஞ்சி – 1 துண்டு

பூண்டு – 4

தனியா தூள் – 1 டீ ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்

தயிர் – 1 கப்

உப்பு – தேவையான அளவு.

தயிர் கத்தரிக்காய் கிரேவி செய்முறை

முதலில் தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். பிறகு, ஒரு பாத்திரம் எடுத்து அடுப்பில் வைத்து சூடேற்றவும் . தொடர்ந்து எண்ணெய் விட்டு கத்தரிக்காயை சுருங்க வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

பிறகு, அதே எண்ணெயில் கடுகு , கறிவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளவும். தொடர்ந்து அவற்றோடு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் மேலே கொடுக்கப்பட்டுள்ள தூள் வகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அவற்றுடன் 1 கப் தயிர் சேர்த்து கிளறவும்.

இதன் பிறகு முன்னர் வதக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்துக் கிளறவும். பின்னர் கால் கப் தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். கொதிக்கும் போதே தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

இப்போது சுவையான தயிர் கத்தரிக்காய் கிரேவி தயாராக இருக்கும், இவற்றை சாதம், சப்பாத்தி என உங்களுக்கு பிடித்த உணவுகளுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Brinjal recipes in tamil simple steps to make curd brinjal gravy in tamil

Next Story
பால் அருந்த சிறந்த நேரம் இதுதான்… நிபுணர்கள் டிப்ஸ்!milk benefits in tamil: Best Time To Drink Milk in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com