buttermilk recipes in Tamil: உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு பொருட்களில் ஒன்றாக தயிர் உள்ளது. பருவமழை பெய்து வரும் இந்த நாட்களில் தயிரை அப்படியே உட்கொள்வதால் உடல் ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவற்ருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மோராக அருந்தி வருவது மிகவும் நல்லது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.
வெளியிலின் தாக்கதை போக்கும் இந்த அற்புதமான தயிரில் வீட்டில் இருந்த படி சுவையான மோர் எப்படி செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.
சுவையான மோர் செய்யத் தேவையான பொருட்கள்:-
2 கப் தயிர்
2 கப் தண்ணீர்
கல் உப்பு – தேவையான அளவு
வறுத்த சீரக தூள்-2 தேக்கரண்டி
1 நறுக்கப்பட்ட பச்சை மிளகாய் (விரும்பினால்)
2 தேக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள்

செய்முறை:-
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் தயிர் மற்றும் தண்ணீர் சேர்க்கவும். பிறகு அவை இரண்டையும் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
தயிர் மற்றும் தண்ணீர் நன்கு கலந்திருப்பதை உறுதி செய்வது அவசியமாகும்.
பிறகு இவற்றுடன் சீரகத் தூள் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். தொடர்ந்து பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை தூவி நன்கு மிக்ஸ் செய்து பருகி மகிழவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil