Advertisment

இரவில் தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? படுக்கைக்கு செல்லும் முன்பு இந்த பானங்களைப் பருகுங்கள்

Natural Sleep Aid Drinks: இரவில் நீங்கள் சரியாக தூங்க முடியாமல் சிரமப்பட்டால், நீங்கள் நன்றாக ஓய்வு எடுக்கவும் காலையில் புத்துணர்ச்சியுடன் எழுவதற்கும் உங்கள் உடல் நலனை உறுதி செய்வதற்கும் ஆரோக்கியமான பானங்களைக் குடியுங்கள். குறைந்தபட்சம் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு கிளாஸ் பால் குடிக்க மறந்துவிடாதீர்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
caffeine, sleep, sleeping problems,இளநீர், பால், பாதாம் பால், கெமோமில் தேநீர், வாழைப்பழம் ஷேக், insomnia, sleeplessness, sleep drinks, sleep aid drinks, தூக்கமின்மைக்கு தீர்வு, தூங்குவதற்கு குடிக்க வேண்டிய பானங்கள், இயற்கை பானங்கள், top drinks, good night drinks, best natural drinks, milk, almond milk, chamomile tea, coconut tea, coconut water, banana smoothie

caffeine, sleep, sleeping problems,இளநீர், பால், பாதாம் பால், கெமோமில் தேநீர், வாழைப்பழம் ஷேக், insomnia, sleeplessness, sleep drinks, sleep aid drinks, தூக்கமின்மைக்கு தீர்வு, தூங்குவதற்கு குடிக்க வேண்டிய பானங்கள், இயற்கை பானங்கள், top drinks, good night drinks, best natural drinks, milk, almond milk, chamomile tea, coconut tea, coconut water, banana smoothie

 Top Sleep Drinks: ஒருவருடைய நல்ல இரவுத் தூக்கம் என்பது அந்த நபருடைய ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக பலருக்கு அதிக அளவில் நீண்ட நேர வேலை, மன அழுத்தம் மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் இரவு நேரத் தூக்கம் சரியாக இருப்பதில்லை. இரவில் நீங்கள் சரியாக தூங்க முடியாமல் சிரமப்பட்டால், நீங்கள் நன்றாக ஓய்வு எடுக்கவும் காலையில் புத்துணர்ச்சியுடன் எழுவதற்கும் உங்கள் உடல் நலனை உறுதி செய்வதற்கும் ஆரோக்கியமான பானங்களைக் குடியுங்கள். குறைந்தபட்சம் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு கிளாஸ் பால் குடிக்க மறந்துவிடாதீர்கள்.

Advertisment

படுக்கைக்கு செல்லும் முன்பு இரவில் உங்களை நன்றாக தூங்க செய்யக்கூடிய  சில இரவுநேர பானங்கள் உள்ளன.

பால்

படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஒரு கிளாஸ் சூடான பால் குடியுங்கள். அதனால், விரைவாக தூங்கலாம். பாலில் அமினோ அமிலம் டிரிப்டோபான் இருப்பதால் விரைவில் தூக்கம் வருகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். டிரிப்டோபான் நிறைய கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்ட உணவில் உள்ளது; அதனால்தான், அதிகமாக ஒன்றை சாப்பிட்ட பிறகு நமக்கு தூக்கம் வருகிறது. சாப்பிடும்போது டிரிப்டோபான் தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோன் மெலடோனின் ஆக மாற்றப்படுகிறது.

பாதாம் பால்

பாலுக்கு அடுத்ததாக பாதாம் பால் நல்ல தூக்கத்தை அளிக்கும். பாதாம் பாலில் டிரிப்டோபனோடு மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது தூக்கத்தின் அளவை மேம்படுத்துகிறது.

கேமோமில் தேநீர்

இது உலக அளவில் தூக்கப் பிரச்னைகளுக்கான தீர்வாக கருதப்படுகிறது. தூக்கம் இல்லாமல் துன்பப்படும் பலருக்கும் கெமோமில் தேநீர் குடிப்பது ஒரு பழக்கமாக உள்ளது. தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு இந்த தேநீரில் காஃபின் இல்லாததால் தூக்கத்தை அளிக்கிறது. சில நேரங்களில் மக்கள் இதை மெக்னீசியம் தாதுப்பொருள் உள்ள பொருட்களுடன் சேர்த்தும் உட்கொள்கின்றனர்.

கடந்த காலங்களில் நடத்தப்பட்ட சில ஆய்வுகளில், கெமோமில் இதய நோய்கள் மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது என்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது என்றும் கூறுகின்றன. இருப்பினும் உறுதியான ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.

இளநீர்

இளநீர் பெரும்பாலும் புத்துணர்ச்சி அளிக்கும் பாணமாக கருதப்பட்டாலும் தூக்கத்தைத் வரவழைப்பதற்கும் இது மிகச் சிறந்த பானம். தூய இளநீரில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது தசைகளை தளர்வாக வைக்க உதவுகிறது. மேலும், இளநீரில் வைட்டமின் பி உள்ளது. இது கடந்த காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, மன அழுத்தத்தின் அளவைக் குறைத்து கவலை மற்றும் மனச்சோர்வைக் குறைக்கிறது என்றும் அறியப்படுகிறது.

வாழைப்பழம் ஷேக்

இது ஒரு சுவையான பானம். சிலருக்கு நள்ளிரவில் ஏற்படும் பசியைப் போக்குவதற்கு இது நல்ல பானம். படுக்கைக்கு முன்பு இதை சாப்பிடுவதால் ஆரோக்கியமான தூக்கத்துக்கு வழி செய்கிறது. இதற்கு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம், சிறிது வெண்ணெய் மற்றும் பால் தேவை அவ்வளவுதான். இளநீரைப் போல வாழைப்பழம் ஷேக்கிலும் மெக்னீசியமும் பொட்டாசியமும் ஏராளமாக உள்ளன.

Healthy Life Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment