Cake recipe tamil news, home made bakery cake recipe: வராண்டாவில் ஒரு சூடான கப் காபி அல்லது டீ-யுடன் உட்கார்ந்து, காற்று வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்... ஆம்! ஸ்பாஞ்சியான கேக் இல்லாமல் அந்த டீ டைமை எப்படி அனுபவிக்க முடியும்? வெளியில் இருந்து ஆர்டர் செய்வதைத் தவிர்த்து, அதை ஏன் நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடாது? உங்களுக்குப் பிடித்த முறையில், பேக்கரியைப் போலவே மென்மையான கேக்கை செய்வது மிகவும் எளிது தான்.
‘சீக்கிரம் மீண்டு வாங்க டியர் பாலு சார்’ – ரஜினிகாந்த் உருக்கமான வீடியோ
Cake recipe tamil news: தேவையான பொருட்கள்
5 - மீடியம் சைஸ் முட்டைகள்
1 கப் - ஆல் பர்பஸ் மாவு
200 கிராம் - சர்க்கரை
தேவைப்பட்டால்...
வெண்ணிலா எசென்ஸ்
1/2 கப் - சாக்கோ சிப்ஸ்
2 டீஸ்பூன் - எலுமிச்சை சாறு
2 டீஸ்பூன் - ஆரஞ்சு சாறு
வேலை, குடும்பம் செம பிஸி… சின்னத்திரை தொகுப்பாளினிகளின் கணவர்கள்!
செய்முறை
ஒரு பெரிய கண்ணாடி கிண்ணத்தில், ஐந்து முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். கலவையை குறைந்தது 2 நிமிடங்கள் நன்றாக அடிக்கவும்.
இப்போது முட்டையில் நுரை வந்திருக்கும். அதோடு 1/2 கப் சர்க்கரை சேர்த்து மீண்டும் அடிக்கவும். ஒரு நிமிடம் நன்றாக அடித்து விட்டு, கோப்பையில் இருக்கும் சர்க்கரையின் மற்ற பாதியைச் சேர்க்கவும்.
இந்த கலவையை 7-8 நிமிடங்கள் விடாமல் கலக்கவும்.
இப்போது இந்த கலவையுடன் ஆல் பர்பஸ் மாவை சேர்த்து விடாமல் அடிக்கவும். நன்றாக கலக்காமல் விட்டால், கலவை கட்டி கட்டியாக இருக்கும். அதனால் 2 நிமிடங்களுக்கு நன்கு அடிக்கவும்.
இதன் பிறகு, மேலே குறிப்பிட்டுள்ள அளவீடுகளின்படி நீங்கள் விரும்பும் ஃப்ளேவரை இந்த கலவையில் சேர்க்கவும்.
பின்னர் ஒரு மைக்ரோவேவ் பேக்கிங் பான் தட்டில் பட்டர் பேப்பர் விரித்து, அதன் மீது கலவையை ஊற்றவும்.
இதை ஒரு மணி நேரம் 160 செல்சியஸில் வேக வைக்கவும்.
வெந்ததும், அதை சிறிய துண்டுகளாக வெட்டி குளிர்வித்து சாப்பிடவும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”