எலும்பு மட்டுமின்றி உடலின் பல்வேறு உறுப்புகள் சீராக இயங்குவதற்கு கால்சியம் மிக முக்கிய தேவையாக இருக்கிறது. பால் குடிக்க பிடிக்காதவர்கள் அல்லது பால் சார்ந்த பொருள்கள் தங்கள் உடலுக்கு சரி வராது எனக் கருதுபவர்கள், மற்ற சில உணவுகளில் இருந்து கால்சியத்தை பெறலாம்.
சர்க்கரைவள்ளி கிழங்கில் நம் உடலுக்கு தேவையான அளவு கால்சியம் இருப்பதாக கூறப்படுகிறது. இதே போல் ராகியிலும் அதிக அளவிலான கால்சியம் இருக்கிறது. சுமார் 2 தோசை செய்யும் அளவிற்கு ராகியை எடுத்துக் கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், சூரியகாந்தி விதைகளில் கால்சியம் காணப்படுகிறது.
குறிப்பாக, முருங்கை கீரையில் கால்சியம் நிறைந்திருக்கிறது. சுமார் 150 முதல் 200 கிராம் முருங்கை கீரையில் நம் உடலுக்கு தேவையான கால்சியம் இருக்கிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர். இது மட்டுமின்றி அத்திப்பழம், பாதாம், மீன் மற்றும் முட்டையில் கால்சியம் சத்து இருக்கிறது. இதில், மீன் மற்றும் முட்டையில் கால்சியம் மட்டுமின்றி வைட்டமின் டி சத்தும் காணப்படுகிறது. இவை மட்டுமின்றி தானிய வகைகளிலும் கால்சியம் சத்து இருக்கிறது.
எனவே, நம் உடலின் தேவை அறிந்து உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்தை நாம் பெற முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“