capsicum recipe in tamil: உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தபடும் மிகளாய் வகைகளில் குடமிளகாயும் ஒன்று. இது காய்கறிகளுக்கு சுவை மற்றும் மணம் தரும் வண்ணமயமான காய்களுள் ஒன்றாகவும், மிளகிற்கு நிகரான சுவை உடைய ஒன்றாகவும் உள்ளது. மேலும், சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு என பல வண்ணங்களில் கிடைக்கும் இந்த மிளகாய் அதிக காரம் இல்லாததாகவும் உள்ளது.
Advertisment
இப்படி நிறைய நற்பண்புகளை உள்ளடக்கியுள்ள குடைமிளகாயில் எப்படி தொக்கு தயார் செய்ய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
குடைமிளகாய் - 4 எண்ணெய் - தேவையான அளவு கடுகு - 1/2ஸ்பூன் கருவேப்பிலை - தேவையான அளவு வெங்காயம் - 3 தக்காளி - 4 குழம்பு மிளகாய்த்தூள் - 3ஸ்பூன் மஞ்சுள் தூள் - 1/2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - ஸ்பூன்
Advertisment
Advertisements
செய்முறை
முதலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு,கருவேப்பிலை போட்டு தளிக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன் பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்
பின்னர் தக்காளி சேர்த்து அவற்றை நன்கு குழையும் வரை வதக்கவும். தொடர்ந்து குடைமிளகாய், மஞ்சுள் தூள்,குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும். அதோடு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிரேவி ஆகும் வரை கொதிக்க வைக்க விடவும். பிறகு கொத்த மல்லி இலைகளை தூவி தணலில் இருந்து கீழே இறக்கவும் .
இப்போது நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த குடைமிளகாய் தொக்கு தயாராக இருக்கும். இவை சாதம் மற்றும் தயார் சாதத்தோடு சேர்த்து சாப்பிட்டால் ரொம்பவே டேஸ்டியாக இருக்கும்.