scorecardresearch

இரவில் தூங்கும் முன்பு 3 ஏலக்காய்… இவ்வளவு நன்மை இருக்கு!

ஏலக்காய் உணவில் பயன்படுத்துவது வாசனைக்கு மட்டும் அல்ல, மருத்துவ குணம் கொண்ட ஏலக்காயை சாப்பிட்டால் பல நன்மைகளைப் பெறலாம். அதிலும், இரவில் தூங்குவதற்கு முன்பு தினமும் 3 ஏலக்காயை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது.

cardamom benefits, cardamom tree, cardamom pronunciation, cardamom powder, cardamom uses, cardamom seeds, ஏலக்காயின் பலன்கள், ஏலக்காய் நன்மைகள், ஏலக்காய், தினமும் 3 ஏலக்காய், ஆரோக்கியம், cardamom substitute, how much cardamom to be eaten a day, what is cardamom used for, cardamom powder benefits, cardamom flavor, substitute for cardamom, ground cardamom

இந்தியா முழுவதும் சைவம், அசைவம் என இரண்டு வகையான உணவுகளிலும் வாசனைக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காய் வெறுமனே மசாலா சுவைக்காகவும் வாசனைக்காகவும் மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை, அதன் மருத்துவக் குணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

ஏலக்காய் இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்தது என்று வகைப்படுத்தப்படுகிறது. ஏலக்காய், இஞ்சி இரண்டி ஆரோக்கிய நன்மைகளும் ஒரே மாதிரியானவை. உணவே மருந்து என்ற தமிழர்களின் பொன்மொழிக்கேற்ப, ஏலக்காய் அமைந்துள்ளது. ஏலக்காய் சாப்பிட்டால், வாய் துர்நாற்றம், இதயம் தொடர்பான பிரச்சனைகள், விக்கல், தோல் தொற்று நோய் போன்றவற்றை போக்குகிறது.

நமது இந்திய மாசாலா பொருட்களில் இடம்பெற்றுள்ள ஏலாக்காயில் பல சத்துக்கள் உள்ளன. ஏலக்காயில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இதனால், ஏலக்காய் உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருளாகப் பார்க்கப்படுகிறது.

அதனால், ஏலக்காயை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்தைப் பெறலாம், ஏலக்காயை சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதை பல வழிகளில் சாப்பிடலாம். ஏலக்காயை வாய் துர்நாற்றத்தைப் போக்க நேரடியாக அப்படியே சாப்பிடலாம்.

அதைவிட முக்கியமானது, தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு, குறைந்தது 3 ஏலக்காயை வெதுவெதுப்பான நீரில் போட்டு சாப்பிடுங்கள். இப்படி தினமும் 3 ஏலக்காயை சாப்பிட்டால், நல்ல உறக்கம் வரும். குறட்டை பிரச்னை தீரும்.

தினமும் வெதுவெதுப்பான நீரில் 3 ஏலக்காயை சாப்பிடுவதால், வாயுத் தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்னைகளை சரி செய்கிறது. அதுமட்டுமில்லாமல், ஏலக்காய் நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா, இதய பாதிப்பு கொண்டவர்கள் என தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை அளிக்கிறது.

அதைவிட முக்கியமானது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு என்பதை தெரிந்துகொள்ளுங்கள். மனப்பதட்டம், குமட்டல் போன்றவற்றிற்கும் ஏலக்காய் சிறந்த மருந்தாக இருக்கிறது. பருவநிலை மாற்றத்தின்போது, வரும் சளி, இருமல், காய்ச்சலுக்கு ஏலக்காய் சிறந்த வீட்டு வைத்தியம் என்று கூறலாம். உடல் பருமன் , உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, போன்ற பிரச்னைகளுக்கும் ஏலக்காய் நல்ல பலன் அளிக்கிறது. ஏலக்காய் புற்று நோய் எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது என்பது முக்கியச் செய்தி. அதனால், இரவில் தூங்குவதற்கு முன்பு தினமும் 3 ஏலக்காயை வெதுவெதுப்பான நீரில் சாப்பிடுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Cardamom benefits cardamom eating atleast 3 in daily get many benefits