Healthy Diet Tips walnut benefits : ஒருவருக்கு இதய ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. இதயம் ஆரோக்கியமாக செயல்பட்டால் தான், உடலின் அனைத்து உறுப்புக்களும் சீராக செயல்பட முடியும்.
எனவே ஒவ்வொருவரும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு நாளும் இறங்க வேண்டும். அதற்கு முதலில் ஒருவர் செய்ய வேண்டியது ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்வது தான்.
வால்நட்ஸ் ஒவ்வொரு நாளும் ஒரு கையளவு வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால், இதய நோயின் அபாயத்தை பாதியாக குறைக்கலாம். வால்நட்ஸில் நல்ல கொழுப்புக்கள் ஏராளமான அளவில் உள்ளது.
சாச்சுரேட்டட் கொழுப்புக்களுக்கு பதிலாக மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்களை உட்கொண்டால், உடலில உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்.
மேலும் வால்நட்ஸிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. வேண்டுமானால், பாதாம், முந்திரி, பிஸ்தா, ஆளி விதை, சியா விதைகள் போன்றவற்றையும் அன்றாடம் சாப்பிடலாம்.
மேலும் படிக்க : How to Prevent Eyes in Summer: கோடைக்காலத்தில் கண் பராமரிப்பு ரொம்ப முக்கியம் அமைச்சரே!