சாக்லேட், முந்திரி, கீரை, காளான்… உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகள் தெரியுமா?

Cashew nut, chocolate, mushroom increse oxyzen in haemoglobin: கொடிய வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கும், இரத்தத்தில் நல்ல அளவு ஆக்ஸிஜனைப் பேணுவதற்கும், ஒருவர் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. COVID-19 இன் இரண்டாவது அலை இந்தியாவில் அதிக தொற்று பரவல் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் ஆபத்தானதாகவும் இருக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் அளவு வேகமாக குறைகிறது. எனவே செயற்கையாக ஆக்ஸிஜன் அளிக்க வேண்டிய தேவை அதிகமாக உள்ளது. கொடிய வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கும், இரத்தத்தில் நல்ல அளவு ஆக்ஸிஜனைப் பேணுவதற்கும், ஒருவர் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும், அவை உங்கள் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும், இதன் விளைவாக ஹீமோகுளோபின் அதிகமாக கிடைக்கும்.

ஹீமோகுளோபின் என்பது இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும், இது இரத்த சிவப்பணுக்களில் உள்ளது, இது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. இது நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் மற்ற அனைத்து செல்கள் மற்றும் திசுக்களுக்கு கொண்டு சென்று அவற்றின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகின்றன. இது கார்பன் டை ஆக்சைடை உயிரணுக்களிலிருந்து, வெளியேற்றுவதற்காக நுரையீரலுக்கு கொண்டு செல்கிறது. அடிப்படையில், ஹீமோகுளோபின் மிக முக்கியமான புரதம், ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதற்கு இன்றியமையாதது மற்றும் இந்த புரதத்தின் அளவு குறைவது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

உடலில் ஒரு நல்ல ஹீமோகுளோபின் பராமரிக்க ஹார்வர்ட் ஹெல்த் மற்றும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கூற்றுப்படி, இரும்பு, ஃபோலிக் அமிலம், தாமிரம், மற்றும் வைட்டமின்கள் சி, பி 12, வைட்டமின் ஏ, வைட்டமின் பி 2 (ரைபோஃப்ளேவின்), வைட்டமின் பி 3 (நியாசின்), வைட்டமின் பி 5, வைட்டமின் பி 6  போன்ற வைட்டமின்களையும் உள்ளடக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இத்தகைய சூழ்நிலையில், இந்த ஊட்டச்சத்துக்களை நாம் உட்கொள்வதால் நமது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்.

ஹீமோகுளோபின் அதிகரிப்புக்குத் தேவையான உணவுகளைத் தற்போது பார்க்கலாம்.

தாமிரச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்

நண்டு, வான்கோழி மற்றும் சிப்பியில் தாமிரச்சத்து அதிகம் உள்ளது. நீங்கள் அசைவம் என்றால், உங்கள் உணவில் 90 கிராம் சிப்பி சேர்க்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் அதில் 245% தாமிரம் உள்ளது. அதேநேரம் ஒரு நண்டு அல்லது வான்கோழியில் 30% தாமிரம் உள்ளது.

சாக்லேட், எள், உருளைக்கிழங்கு, முந்திரி மற்றும் காளான்களிலும் தாமிரச்சத்து நிரம்பியுள்ளது. 45% தாமிரச்சத்து இருப்பதால் சாக்லேட் சாப்பிடுவது நன்மை பயக்கும்.

இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்

கோழி, வான்கோழி, வாத்து மற்றும் ஆட்டு இறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. 180 கிராம் இறைச்சியை உட்கொள்வதால் உங்கள் அன்றாட இரும்புச்சத்து தேவையில் 52% உங்களுக்குக் கிடைக்கும்.

பீன்ஸ், இலை காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் பட்டாணி போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ, ஆட்டு இறைச்சி மற்றும் முட்டைகளில் காணப்படுகிறது. 90 கிராம் இறைச்சி உங்களுக்கு தினசரி வைட்டமின் ஏ தேவைக்கு 444% தரும்.

இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், சுண்டைக்காய், மா, மற்றும் கீரையில் பீட்டா கரோட்டின் வடிவத்தில் வைட்டமின் ஏ உள்ளது. அரை கப் கேரட் நமது தினசரி வைட்டமின் ஏ தேவையில் 184% தருகிறது.

வெண்ணிலா ஐஸ்கிரீமும் வைட்டமின் ஏ மூலமாகும்.

வைட்டமின் பி 12

முட்டை, இறைச்சி உறுப்புகளான சிறுநீரகம், கல்லீரல் மற்றும் பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களை 90 கிராம் உட்கொண்டால் 223% வைட்டமின் பி 12 கிடைக்கும்.

நீங்கள் ஆப்பிள், பீன்ஸ், சூரியகாந்தி விதைகள், தக்காளி, ஓட்ஸ், தயிர், பாதாம், சீஸ், ரொட்டி ஆகியவற்றையும் வைட்டமின் பி 12 க்காக உட்கொள்ளலாம்.

வைட்டமின் பி 3

90 கிராம் கோழி அல்லது வான்கோழி வைட்டமின் பி 3 க்கான உங்கள் அன்றாட தேவையில் உங்களுக்கு 50%ஐ வழங்க முடியும்.

அதே நேரத்தில், ஒரு கப் அரிசி மூலம் 12-26% வைட்டமின் பி 3 தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

வறுத்த உருளைக்கிழங்கு, வறுத்த சூரியகாந்தி மற்றும் சுண்டைக்காய் விதைகள், வறுத்த வேர்க்கடலையும் 8% முதல் 26% அளவிற்கு வைட்டமின் பி 3யை கிடைக்கச் செய்யும்.

வைட்டமின் பி 5

டுனா மீன், முட்டை, கோழியில் வைட்டமின் பி 5 நிறைய உள்ளது. இந்த பொருட்களை உட்கொள்வது வைட்டமின் பி 5 இன் தினசரி தேவையில் 166% வழங்க முடியும்.

காளான்கள், சூரியகாந்தி விதைகள், உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, வெண்ணெய், ப்ரோக்கோலி, பழுப்பு அரிசி, ஓட்ஸ், சீஸ் போன்றவை வைட்டமின் பி 5யை 8% முதல் 52% வரை கொண்டவை.

வைட்டமின் பி 6, பி 9 மற்றும் பி 12

உறுப்பு இறைச்சி (கல்லீரல்), கோழி, டுனா மீன், அத்துடன் வாழைப்பழங்கள், கீரை, வெண்ணெய், பிரஸ்ஸல்ஸ் போன்றவற்றிலிருந்து வைட்டமின் பி 6 மற்றும் பி 9 பெறலாம்.

வைட்டமின் பி 12 பொதுவாக காய்கறிகளில் இல்லை.

இருப்பினும், பி 12 குறிப்பாக கருப்புக் காளான், கோல்டன் சாண்ட்ரெல் காளான் போன்ற காளான்களில் காணப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cashew nut chocolate mushrooms increasing oxyzen in haemoglobin

Next Story
பீரியட் நேரத்தில் பெண்கள் தடுப்பூசி போடக்கூடாதா? சோசியல் மீடியா வதந்திக்கு அரசு மறுப்புCOVID 19 vaccination, covid 19 vaccine, menstruation, கோவிட் 19, கொரொனா தடுப்பூசி, கோவிட் 19 தடுப்பூசி, சோசியல் மீடியா வதந்தி, பீரியட் நேரத்தில் தடுப்பூசி போடலாமா Government debunks social media rumours, may 1
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express